24 மணி நேரமும் கதவு திறந்துதான் இருக்கும்! வாங்க…..முதல்வர் பதவியை தவிர்த்து மற்றதை பேசலாம்! சிவ சேனாவுக்கு பா.ஜ.க. அழைப்பு

 

24 மணி நேரமும் கதவு திறந்துதான் இருக்கும்! வாங்க…..முதல்வர் பதவியை தவிர்த்து மற்றதை பேசலாம்! சிவ சேனாவுக்கு பா.ஜ.க. அழைப்பு

எங்களது கதவு 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும். முதல்வர் பதவியை தவிர்த்து மற்றதை பேசலாம் என மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டில் சிவ சேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து 13 நாட்கள் தாண்டி விட்டது. இருப்பினும் பெரும்பான்மை இடங்களை வென்ற பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி இன்னும் ஆட்சி அமைக்காமல் இருந்து வருகிறது. முதல்வர் பதவியை எங்களுக்கு சமகாலம் தர வேண்டும் என்ற சிவ சேனாவின் கோரிக்கைதான் இதற்கு காரணம். அதேசமயம், முதல்வர் பதவியை தவிர வேறு எதுவும் வேண்டுமானாலும் கேளுங்க என சிவ சேனாவிடம் தெளிவாக கூறிவிட்டது பா.ஜ.க.

சந்திரகாந்த் பாட்டில்

இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது வீட்டில் மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டில் சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சி அமைக்க எங்களுக்கு மக்கள் உத்தரவு தந்துள்ளார்கள். சிவ சேனா எங்களிடம் ஒரு பார்முலாவை தரவில்லை. இது குறித்து பேச எங்களது கதவு 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும். ஒவ்வொருடனும் இணைந்து நாங்கள் ஆட்சியை அமைப்போம். பட்னாவிஸ் தலைமையில் எங்களது கூட்டாளிகளுடன் கூட்டணியை அமைப்போம் என தெரிவித்தார்.

நிதின் கட்கரி

இதற்கிடையே, பா.ஜ.க.-சிவ சேனா இடையிலான பிரச்னையை நிதின் கட்கரி 2 மணி நேரத்தில் தீர்த்து வைத்துவிடுவார். அதனால மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை சரிசெய்ய நிதின் கட்கரியை நியமனம் செய்யும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு சிவ சேனாவை சேர்ந்த கிஷோர் திவாரி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.