24 மணி நேரத்துல 9 கொலைகள்! போலீஸ் மட்டும் எங்க கையில இருந்தா இது நடக்குமா! பொங்கும் கெஜ்ரிவால்…

 

24 மணி நேரத்துல 9 கொலைகள்! போலீஸ் மட்டும் எங்க கையில இருந்தா இது நடக்குமா! பொங்கும் கெஜ்ரிவால்…

தலைநகர் டெல்லியில் 24 மணி நேரத்தில் 9 கொலைகள் நடந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்க ஆட்சியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தால் இது போன்று நடக்காது என்று டிவிட்டரில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் பதிவு செய்துள்ளார்.

டெல்லியை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி வருகிறது. டெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் அதன் பாதுகாப்பை மத்திய அரசு கவனித்து வருகிறது. ஆகவே, மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் டெல்லியில் மட்டும் காவல்துறை மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால், காவல்துறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

டெல்லி போலீஸ்

ஆனால் மத்திய அரசு அதனை கொண்டு கொள்வதில்லை. இந்த நிலையில், டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் வயதான தம்பதிகள் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அந்த கொலைகளையும் சேர்த்து 24 மணி நேரத்தில் 9 கொலைகள் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டெல்லி நகர் முழுவதும் ஆபத்தான குற்றங்கள் அதிகரித்துள்ளது. வசந்த் விஹார் பகுதியில் வயதான தம்பதிகளும், அவரது வீட்டு வேலையாளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகி உள்ளது. டெல்லிவாசிகள் பாதுகாப்புக்காக யார் கதவை தட்டுவது?.

டெல்லி போலீஸ்

காவல் துறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளை தொடங்கும் என பதிவு செய்து இருந்தார். கெஜ்ரிவாலின் கருத்துக்கு டெல்லி காவல்துறை புள்ளிவிவரத்துடன் பதிலடி கொடுத்தது. கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாக டெல்லி போலீசார் டிவிட்டரில் பதிவு செய்தனர்.