24 மணி நேரத்தில் 2 பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ்… கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிஸ்சார்ஜ் கொள்கை வெளியீடு….

 

24 மணி நேரத்தில் 2 பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ்… கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிஸ்சார்ஜ் கொள்கை வெளியீடு….

கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்வதற்கான கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் 2 பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்தால் மட்டுமே அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதேசமயம் மருத்துவ சிகிச்சையின் பலனாக இதுவரை 13 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இநநிலையிலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பாக கொள்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகள்

மத்திய அரசின் கொள்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நெறிமுறைகளின் நிர்வகிக்கப்படுவார்கள். கொரோனா வைரசிலிருந்து மீண்டு விட்டார்கள் என தெரிந்தாலும், 24 மணி நேரத்தில் அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் 2 பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

மருத்துவமனை

மார்பு ரேடியோகிராபிக் மற்றும் சுவாச மாதிரிகளில் கொரோனா வைரஸ் இல்லை என சான்றுகள் கிடைத்தால் மட்டுமே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என சந்தேகப்படும் நபர்களுக்கு முதல் கட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் இருப்பினும் அடுத்த 14 தினங்களுக்கு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசுக்கு மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகினர். சீனா மற்றும் இத்தாலியில்தான் கொரோனாவுக்கு அதிகம் பேர் பலியாகி உள்ளனர்.