24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 1ஆம் தேதி வழக்கமாக தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று காலதாமதமாக தொடங்குகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் 6 நாட்கள் தாமதமாகி 7ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை அதாவது 8 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.