24 நாளில் ரொக்க பண புழக்கம் ரூ.75,647 கோடி அதிகரிப்பு…. இதுக்கும் லாக்டவுன்தான் காரணம்….

 

24 நாளில் ரொக்க பண புழக்கம் ரூ.75,647 கோடி அதிகரிப்பு…. இதுக்கும் லாக்டவுன்தான் காரணம்….

லாக்டவுனால் கடந்த மாதத்தின் முதல் 24 நாட்களில் நம் நாட்டில் ரொக்க பண புழக்கம் ரூ.75,647 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு, நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வரும் 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். எந்த தொழிலும் நடக்கவில்லை மற்றும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருக்கின்றனர்.

மளிகை கடை

இந்த சூழ்நிலையிலும், உள்நாட்டில் ரொக்க பண புழக்கம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த மாதத்தின் முதல் 24 நாட்களில் ரொக்க பண புழக்கம் ரூ.75,647 கோடி அதிகரித்து ரூ.25.23 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மார்ச் இறுதியில் ரொக்க பண புழக்கம் ரூ.24.47 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் ரொக்க பண புழக்கம் ரூ.16,660 கோடி உயர்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

லாக்டவுனால் மக்கள் சேமிக்கும் நிலையில் இல்லை கையிலிருக்கும் பணத்தை கொண்டு அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கொரோனா நெருக்கடி நிலவரத்தில் வங்கியில் பணத்தை போடுவதை காட்டிலும் எடுப்பதுதான் அதிகமாக இருந்தது. இதுதவிர நலிவடைந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் (நிதி உதவி) அதிகளவில் கிடைத்தது இதனால் ரொக்க பண புழக்கம் அதிகரித்தது.  மேலும் மற்றும் லாக்டவுனால் ரொக்க பணம் மீண்டும் வங்கி சிஸ்டத்துக்கு திரும்பாததும் உள்நாட்டில் ரொக்க பண புழக்கம் அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.