24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்ததா? – சுங்கத்துறை மறுப்பு

 

24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்ததா? – சுங்கத்துறை மறுப்பு

தமிழகத்துக்கு 2 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்துகொண்டே இருக்கிறது என்று இரண்டு வாரங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா கூறிக்கொண்டே இருந்தனர்.

தமிழகத்துக்கு 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்ததாக அரசு அறிவித்துள்ள நிலையில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளன.
தமிழகத்துக்கு 2 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்துகொண்டே இருக்கிறது என்று இரண்டு வாரங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா கூறிக்கொண்டே இருந்தனர். இவர்கள் கூறிய தகவலிலும் மாறுபாடுகள் இருந்தன. இந்த நிலையில் இந்தியாவுக்கு முதல் ரேப்பிட் டெஸ்ட் கிட் நேற்று வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. அவற்றை மாநிலங்களுக்கு பிரித்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்ததாக தமிழக அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதுவும் சீனாவில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

rapid-test-kit-67

தமிழக அரசு ஆர்டர் செய்தது பல லட்சம்… வந்ததோ 24 ஆயிரம் என்றால் மீதி எங்கே என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ரேப்பிட் டெஸ்ட் கிட் வந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ளனர். இன்று சென்னை வந்த கார்கோ விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்ட முகக்கவசம், கையுறைகள் அடங்கிய 99 பார்சல்களும், சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட வேறு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 47 பார்சல்களும் இருந்தன. கொரோனாவை கண்டறியும் ரேப்பிட் டெஸ்ட் கிட் வரவில்லை என்று கூறியுள்ளனர். 
ஏற்கனவே ரேப்பிட் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுங்கத்துறை அதிகாரிகளின் தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.