24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டி சேர்ப்பு!!

24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டி சேர்ப்பு!!

2022 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண்கள் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டி சேர்ப்பு!!

உலக கோப்பை, ஒலிம்பிக் தொடரைப் போல ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும். இதில் உலகின் பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.

2022 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண்கள் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை, ஒலிம்பிக் தொடரைப் போல ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும். இதில் உலகின் பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.

கடந்த 1998-ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டியும் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. அதன் பிறகு அதிரடியாக காமன்வெல்த் போட்டிகளின் குடும்பத்திலிருந்து கிரிக்கெட் போட்டி நீக்கப்பட்டது.

அப்போதைய காலகட்டத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக காமன்வெல்த் நிர்வாகத்திடம் ஐசிசி சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கையில் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை ஒரு அங்கமாக கருதுமாறும் இதற்கு முழு ஒத்துழைப்பை ஐசிசி நிர்வாகம் அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஐசிசியின் இந்த கோரிக்கையை பரிசீலித்த காமன்வெல்த் குழு நிர்வாகம், வருகிற 2022ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை மட்டும் சேர்ப்பதாக அறிவித்தது.

2022 ஆம் ஆண்டு பிர்மிங்காமில் நடைபெறும் இந்த காமன்வெல்த் போட்டியில் 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியை காமன்வெல்த்தில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளதால் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
 
2022 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

1998-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.