Home சினிமா 24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மீ டூ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நீ…ண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில்,

24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக இயக்குவதற்கு அரை நூற்றாண்டுகளாகவே திரையுலகின் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, ஒதுங்கிக் கொண்டார்கள். இந்நிலையில், தனது கனவு படமாக கருதி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக  எடுக்க உள்ளார். இந்த படத்திற்காக இதுவரையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மீ டூ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நீ…ண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இப்படதிற்கு கலை இயக்குனராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Thottadharani

பொன்னியின் செல்வன், சோழர் காலத்தில் நடப்பது போல கதைக்களம் உள்ளதால், இப்படத்திற்கு பிரம்மாண்ட செட்கள் போட வேண்டியிருக்கும். ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் படித்து கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் கதையை, அவர்களின் கண் முன்னால் கொண்டு வருவதற்காக இந்த பணியை அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தோட்டாதரணியைத் தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம். 

இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய நாயகன், தளபதி, பம்பாய் ஆகிய படங்களுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து தோட்டா தரணி மீண்டும் மணிரத்னத்துடன் இணைகிறார்.

 

24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

கோடநாடு கொலை வழக்கில் கைதாகியுள்ள சயானின் லேட்டஸ்ட் வாக்குமூலம் மீண்டும் அவ்வழக்கின் மீதான கவனத்தைக் குவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயர் அடிபடுவதே அதற்குக் காரணம். இந்தக் கொலை வழக்கில்...

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

பெரம்பலூர் பெரம்பலூரில் குடும்ப தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர்...

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்...

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ்...
TopTamilNews