அன்னத்தின் காதல்…23 ரயில்களை ரத்து செய்த ரயில்வேயின் மனிதாபிமானம்..

 

அன்னத்தின் காதல்…23 ரயில்களை ரத்து செய்த  ரயில்வேயின் மனிதாபிமானம்..

நதியில் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்த அன்னப்பறவைகள் இரண்டு , மெல்ல கரையேறி அருகில் இருந்த ஜெர்மனி புல்டேடல் ரயில் நிலையத்திற்குள் சென்றுவிட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்கள் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் ஒரு அன்னப்பறவை சிக்கி உயிரிழந்துவிட்டது. உயிரிழந்த அந்த அன்னப்பறவை அங்கேயே தொங்கிக்கொண்டு இருந்தது.

அன்னத்தின் காதல்…23 ரயில்களை ரத்து செய்த  ரயில்வேயின் மனிதாபிமானம்..

கண் முன்னேயே தனது ஜோடியை பறிகொடுத்துவிட்ட அன்னப்பறவை, சோகத்தில் அங்கிருந்து செல்லாமல் தண்டவாளத்தின் இடையில் படுத்துவிட்டது. இதைக்கண்ட ரயில்வே நிர்வாகம் அந்த தடத்தில் செல்லும் ரயிலை நிறுத்தி வைத்தது. மேலும், வெளியில் இருந்து வரும் 23 ரயில்களை ஒரு மணி நேரம் ரத்து செய்தது.

தீயணைப்பு துறையினர் வந்து மின்கம்பியில் சிக்கி இருந்த அன்னப்பறவையை எடுத்தனர். பின்னர், தண்டவாளத்தின் இடையில் படுத்திருந்த அன்னப்பறவையை தூக்கிகொண்டு போய் அருகில் இருந்த நதியில் விட்டனர்.

ரயில்கள் ரத்தானதால் அதிருப்தி அடைந்த பயணிகள் அனைவரும் விசயத்தை கேள்விப்பட்டதும் ரயில்வேயின் மனிதாபிமானத்தால் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.