என் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு நான் விடுதியில் தங்கியிருக்கிறேன்… கமல் உருக்கம்

 

என் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு நான் விடுதியில் தங்கியிருக்கிறேன்… கமல் உருக்கம்

சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்து களம் காணுகிறது மக்கள் நீதி மய்யம். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அவரை எதிர்த்து அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசனுக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

என் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டு நான் விடுதியில் தங்கியிருக்கிறேன்… கமல் உருக்கம்

இது தொடர்பாக இரு தரப்புக்கும் முட்டல் மோதல் வந்தபோது, மக்கள் யாருடைய சேவை என்று நினைக்கிறார்களோ அவர்கள் வரப்போகிறார்கள். இதில் தேவையில்லாமல் ஆளாளுக்கு அடித்துக்கொள்ள வேண்டாம். அவரவர் கொள்கையை சொல்லுங்கள் என்று மனம் திறந்த மடல் ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்.

கோவை தெற்கு தொகுதியில் தான் வெற்றி பெற்றுவிட்டால் முன் மாதிரியான தொகுதியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று உறுதி கொடுத்திருக்கும் கமல், தான் வெற்றி பெற்றுவிட்டால் தனது முகவரியை கோவை தெற்கிற்கு மாற்றிக்கொள்கிறேன் என்றும் இப்போது உறுதி கொடுத்திருக்கிறார்.

ஜெயித்துவிட்டால் சென்னக்கு ஓடிவிடுவார் கமல். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாகிவிடுவார். அப்புறம் தொகுதியை கவனிக்க மாட்டார் என்று எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்வதால் இவ்வாறு அவர் உறுதி அளித்திருக்கிறார்.

அவர் மேலும் இது தொடர்பாக இன்று இறுதி நாள் பிரச்சாரம் என்பதால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை சுகாசினி மணிரத்தினம், சமக கட்சியின் ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது பேசிய கமல், ‘’எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன். என் வீடு என் இடம் எல்லாவற்றையும் கட்சிக்காக கொடுத்துவிட்டு விடுதியில் தங்கி இருக்கிறேன். எம்.எ.ஏ. பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படத்தில் நடித்தது போல் நானும் நடிப்பேன். அரசியலுக்கு நடிப்பது இடையூறு என்றால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்’’என்றார்.