‘ஒரே நாளில் 23,950 பேர் பாதிப்பு’ : உருமாறிய கொரோனாவால் மக்கள் அச்சம்!

‘ஒரே நாளில் 23,950 பேர் பாதிப்பு’ : உருமாறிய கொரோனாவால் மக்கள் அச்சம்!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக வெளியாகும் தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், பிற நாடுகளுக்கு பரவாத வண்ணம் தடுக்க வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவுக்கும் பிரிட்டன் விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களில் அங்கிருந்து வந்த நபர்களை பரிசோதித்ததில் லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

‘ஒரே நாளில் 23,950 பேர் பாதிப்பு’ : உருமாறிய கொரோனாவால் மக்கள் அச்சம்!

அவர்கள் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய வகை கொரோனாவால் மீண்டும் பொதுமுடக்கம் போடப்படுமா? கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

‘ஒரே நாளில் 23,950 பேர் பாதிப்பு’ : உருமாறிய கொரோனாவால் மக்கள் அச்சம்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,950 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 333 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,46,444 ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 96,63,382 பேர் குணமடைந்ததால் தற்போது 2,89,240 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.