கொரோனாவால் தேர்தல் அதிகாரிக்கு கார் ஓட்ட மறுத்த டிரைவர்: ஆட்சியர் அன்பழகனின் மனிதாபிமானம்

கொரோனாவால் தேர்தல் அதிகாரிக்கு கார் ஓட்ட மறுத்த டிரைவர்: ஆட்சியர் அன்பழகனின் மனிதாபிமானம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக வெளிமாநிலங்களை சேர்ந்த ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் தேர்தல் அதிகாரிக்கு கார் ஓட்ட மறுத்த டிரைவர்: ஆட்சியர் அன்பழகனின் மனிதாபிமானம்

மதுரை மாவட்டத்தின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மற்றும் வெளிமாநில துணை ராணுவ வீரர்களின் பணிகளை கண்காணிக்கும் பார்வையாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம் வீர் யாதவ் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர் மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல்து றை விடுதியில் தங்கி்யிருந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.

கொரோனாவால் தேர்தல் அதிகாரிக்கு கார் ஓட்ட மறுத்த டிரைவர்: ஆட்சியர் அன்பழகனின் மனிதாபிமானம்

கொரோனா பரிசோதனையில் தரம் வீர் யாதவ்வுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடிவெடுத்து, தனக்காக நியமிக்கப்பட்டிருந்த டிரைவரை காரை எடுக்க சொல்லி இருக்கிறார்.

கொரோனா என்று தெரிந்ததும் அச்சத்தினால் அவர் காரை எடுக்க மறுத்துள்ளார். இதைக்கேள்விப்பட்ட மதுரை ஆட்சியர் அன்பழகன், உடனே தானே முன்வந்து, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை செய்துகொண்டு, தனது காரிலேயே தரம் வீர் யாதவ்வை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சேர்த்தார்.

ஆட்சியரின் அன்பழகனின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும் கண்டு மதுரை மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்.