அமமுக வேட்பாளர் சந்திரன் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு

 

அமமுக வேட்பாளர் சந்திரன் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இதனால் தலைவர்களும், வேட்பாளர்களூம் இறுதிகட்ட பிரச்சாரத்தின் டென்ஷனுடன் இருக்கிறார்கள்.

அமமுக வேட்பாளர் சந்திரன் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு

இந்நிலையில் சேந்தமங்கலம்(தனி) தொகுதியின் அமமுக வேட்பாளர் பி.சந்திரன்(கொல்லிமலை சந்திரன்) அதிமுகவில் இணைந்துள்ளார் என்று தகவல். திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல்.

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.சந்திரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கே.பொன்னுசாமி களத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் திடீரென்று விலகியதால் அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.