திமுக மாஜி பெண் அமைச்சருக்கு எதிராக கமலா ஆலடிஅருணா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

 

திமுக மாஜி பெண் அமைச்சருக்கு எதிராக கமலா ஆலடிஅருணா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் களமிறங்கி இருக்கும் அவருக்கு ஓட்டு போடாதீங்க என்று பூங்கோதையின் தாயார் கமலா ஆலடி அருணா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பூங்கோதை கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில் பூங்கோதையின் தாயார் கமலா ஒரு பகீர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

திமுக மாஜி பெண் அமைச்சருக்கு எதிராக கமலா ஆலடிஅருணா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அந்த வீடியோவில், ’’என் கணவர் ஆலடி அருணா மிகவும் நேர்மையானவர். யாரிடமும் லஞ்சம் வாங்காதவர். ஆனால் அவரது மகள் பூங்கோதை, என் கணவரின் நேர்மையான நேர்மாறாக இருக்கிறார். அதனால் என் மகளுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். என் மகளை மீண்டும் எம்எல்ஏ ஆக்காதீர்கள். அவர் உங்களுக்கு எதுவும் செய்யமாட்டார்’’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவர் மேலும், அந்த வீடியோவில் என் மகள் பூங்கோதை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருக்கிறார். திருவண்ணாமலையில் ஒரு ரிசார்ட், மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட் கட்டியிருக்கிறார் . இதுபோன்று இன்னும் நிறைய இடங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்.

திமுக மாஜி பெண் அமைச்சருக்கு எதிராக கமலா ஆலடிஅருணா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

பூங்கோதை மட்டும் மீண்டும் எம்எல்ஏ ஆனால், இதே மாதிரி சொத்துக்களை வளைத்து போடுவாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார். அதனால் அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். என் மகள் மீண்டும் எம்எல்ஏ ஆகக்கூடாது என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். என் மகள் பூங்கோதை அவரது மகள் திருமணத்தை லஞ்ச பணத்தின் மூலம் ஆடம்பரமாக நடத்தி இருக்கிறார்’’ என்று தன் மகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் கமலாவின் அந்த வீடியோ தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.