’வரும் ஆனா வராது’ன்னு சொன்ன ஸ்டாலின்

 

’வரும் ஆனா வராது’ன்னு சொன்ன ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் வடலூரில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசியபோது, ‘’பிரதமர் மோடி அவர்களே 2015ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தீர்கள்.

’வரும் ஆனா வராது’ன்னு சொன்ன ஸ்டாலின்

அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக மதுரையில் அடிக்கல் நாட்டு விழா நடத்தினீர்கள். ஒரு செங்கல் வைத்துவிட்டு சென்று விட்டீர்கள். இன்றைக்கு அந்தச் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு தம்பி உதயநிதி ஊர் ஊராகச் சென்று காட்டிக் கொண்டிருக்கிறார்’’என்று சொல்லிவிட்டு, இந்த விவகாரத்திற்கு மோடி பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

மேலும், ‘’பிரதமர் இன்றைக்கு என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல சிறப்பாக இருக்கும் என்று பேசி விட்டுச் சென்றிருக்கிறார் . தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? 15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையை தொடங்கி விட்டீர்கள். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி விட்டீர்கள். ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாக செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி?

’வரும் ஆனா வராது’ன்னு சொன்ன ஸ்டாலின்

ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார்… ’வரும் ஆனா வராது’ என்று. அது போலத்தான் இருக்கிறது. அது மட்டும் சொல்லவில்லை… தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார் மோடி. அது என்ன, ’எண்ணற்ற திட்டம்’.

எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாக சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை. ஆனால் இப்போது பொய்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் மோடி அவர்கள். அவர் ஒன்னொன்றும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது என்று சொல்லியிருக்கிறார். இது ஒரு அபாண்டமான பொய் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது நமது இளைஞர்களால் தான்’’என்றார் ஸ்டாலின்.