Home அரசியல் அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

திமுக ஆட்சிக்கு வந்தால்… திமுக ஆட்சிக்கு வந்தால்… என்று பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின், இப்போது திமுகதான் ஆட்சிக்கு வரும் என்றே அழுத்தமாக பேசி வருகிறார்.

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

’’கொங்கு மண்டலம் என்றால் அதிமுகவின் கோட்டை என்றும், எகு கோட்டை என்றும் பழனிச்சாமியின் அதிமுகவினரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிமுகவின் கோட்டையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்க ஓட்டையைப் போட்டு விட்டோம். அதே போல் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டை இல்ல வாஸ் அவுட் பண்ண போகிறோம்’’என்றார் ஸ்டாலின்.

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

கவுண்டம்பாளையம் பிரச்சாரத்தில் பேசிய அவர் மேலும், ‘’கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சாதாரண வெற்றியல்ல இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயமாக உறுதியாக எங்களுடைய அணி மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது.

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையிலும் எடப்பாடியில் பழனிச்சாமி, கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, உடுமலையில் ராதாகிருஷ்ணன், பவானியில் கருப்பண்ணன் என பலம் வாய்ந்த அமைச்சர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வளவு பலம் வாய்ந்த அமைச்சர்கள் இந்த மண்டலத்தில் இருக்கின்ற போது இந்த கொங்கு மண்டலத்திற்கு மேற்கு மண்டலத்திற்கு எதையும் செய்யாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக கொள்ளையடிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அவர்களது சாதனையாக அமைந்திருக்கிறது.

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

வேலுமணி தன்னுடைய தம்பியையும் பினாமியையும் வைத்து மொத்த கோவையையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மண்டலத்திற்கு நன்மையை செய்வதாக நடித்த நம்பிக்கை துரோகிகளுக்கு மற்ற பகுதிகளை விட இந்த மேற்கு மண்டல தொகுதி மக்கள் தான் மறக்க முடியாத அளவுக்கு பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்

இந்த கூட்டத்தின் வாயிலாக நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியிலும் இந்த மேற்கு மண்டலத்தில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி எல்லா வளர்ச்சி நிச்சயமாக உறுதியாக செய்து கொடுக்கப்படும். ஏனென்றால் நான் கலைஞருடைய மகன். அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன். அதனால் நிச்சயமாக செய்வேன் என்று உறுதியை நான் இங்கிருக்கும் மக்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்’’என்றார்.

அதிமுக கோட்டையில் நாங்க போட்ட ஓட்டை..ஸ்டாலின் உற்சாகம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாகப்...

“ஸ்டாலின் நாடு காக்கு துடிக்கும் நல்லவர்” – ரூ.5 லட்சம் வழங்கி 5 வரிகளில் கவி பாடிய வைரமுத்து!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நடுவே கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு...

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில்...
- Advertisment -
TopTamilNews