தமிழ்நாடு எப்படி தக்‌ஷிணபிரதேசம் ஆனது? யோகி மேஜிக்கா?

தமிழ்நாடு எப்படி தக்‌ஷிணபிரதேசம் ஆனது? யோகி மேஜிக்கா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விருதுநகர் மற்றும் கோவை தெற்கு தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்.

தமிழ்நாடு எப்படி தக்‌ஷிணபிரதேசம் ஆனது? யோகி மேஜிக்கா?

அவரின் வருகையை முன்னிட்டு பாஜக வெளியிட்ட போஸ்ட்கார்டு, போஸ்டர் விளம்பரங்கள்தான் இப்போது சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.

தமிழ்நாடு எப்படி தக்‌ஷிணபிரதேசம் ஆனது? யோகி மேஜிக்கா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என்பதற்கு பதிலாக ‘தக்‌ஷிண பிரதேச’சட்டமன்ற தேர்தல் என்று இருக்கிறது. இதனால், ‘’அண்ணாவின் தமிழ்நாடு என்ற பெயரை தக்‌ஷிணபிரதேசம் என்று மாற்றியது யார்?’’என்று ஆவேசக்கேள்வியை வீசுகிறது திமுக.

’’தமிழ்நாட்டின் பெயர்மாற்றி தக்‌ஷிணப்பிரதேசமா?அமிழ்தான எம் நாட்டின் பெயர்மாற்றத் துணிவாயா? அதற்கான ஒத்திகைதான் உன்கட்சி விளம்பரமா?’’ என்று கொந்தளித்திருக்கிறார் மறைமலை இலக்குவனார்.