‘’ஆதாரப்பூர்வமாகவும்,அச்சமின்றியும்.. தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர்..’’

‘’ஆதாரப்பூர்வமாகவும்,அச்சமின்றியும்.. தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர்..’’

தமிழினப்படுகொலை ஒரு இனப்படுகொலையென உலகிற்கு உறுதிபட அறிவித்தும், சிங்களப் பேரினவாதத்தின் நெருக்கடிக்கு அஞ்சாமல் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய மன்னார் மாவட்ட முன்னாள் பேராயர் போற்றுதலுக்குரிய இராயப்பு ஜோசப் இன்று மறைந்தார். அவர் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ள மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி,

‘’ஆதாரப்பூர்வமாகவும்,அச்சமின்றியும்.. தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர்..’’

2009 இனப்படுகொலையின் தகவல்களை ஆதாரப்பூர்வமாகவும், அச்சமின்றியும் பதிவு செய்தார். கொல்லப்பட்டவர்கள் 146,000 எனும் எண்ணிக்கையை உறுதி செய்தவர். விடுதலைபுலிகளோடு அயராது துணைநின்று மக்களை பாதுகாத்தவர். சர்வதேச அளவில் தமிழர் கோரிக்கை சென்றடைய பிரதான காரணமாக இருந்தவர் என்றும்,

‘’ஆதாரப்பூர்வமாகவும்,அச்சமின்றியும்.. தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர்..’’

வல்லரசுகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் தமிழர் தரப்பில் நின்றவர். 2014ல் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்து, தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர். இலங்கை அரசின் LLRC அறிக்கை, காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகியவற்றின் பொய்முகத்தை அம்பலப்படுத்தியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

‘’ஆதாரப்பூர்வமாகவும்,அச்சமின்றியும்.. தமிழர்களுக்கான ‘மாதிரி தீர்மானத்தை’ வெளியிட்டவர்..’’

தமிழீழ மக்களின் மனசாட்சியாக நின்ற உயர்ந்த உள்ளத்தை இழந்து நிற்கிறோம். அரசியல்வயப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பதே இறைவன் பணி என்று செயல்பட்ட பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு மே17 இயக்கத்தின் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம். மலரும் தமிழீழம் அவரது புகழை ஓயாது ஒலிக்கும் என்று தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார் திருமுருகன்காந்தி.