அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

 

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

தண்ணீர் வற்றிய ஆற்றுக்குள் பிரச்சாரம் நடத்தியதொரு காலம். யாருக்கும் எந்த இடையூரும் இருக்கக்கூடாது என்று ஆற்றுமணலில் பொதுக்கூட்டம், பிரச்சாரம் செய்த தலைவர்கள் இருந்தார்கள். அடுத்தவர் மனம் புண்படக்கூடாது என்று அந்த நல்ல தலைவர்கள் வாழ்ந்த இதே தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்ட தலைவர்களும் இருக்கிறார்கள் என்று மக்கள் நொந்து பொய் புலம்புகிறார்கள்.

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

இப்போதெல்லாம் தேர்தல் வந்துவிட்டாலே ஒருவர் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு சென்றுவர முடியவில்லை. தெருமுனை பிரச்சாரம், முச்சந்தி பிரச்சாரம், நாலு ரோடு பிரச்சாரம் என்று போக்குவரத்து இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள் அரசியல் கட்சியினர்.

இந்த ஒரு விசயத்தில் மட்டும் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளாகவே இருக்கின்றன.

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

போரூர் சிக்னல் என்பது பரபரப்பான சிக்னல். வடபழனி – குன்றத்தூர்- கிண்டி- பூந்தமல்லி சாலைகளின் சந்திப்பு அது. ஐந்து நிமிடம் டிராபிக் பிரச்சனை என்றாலே மக்கள் விழி பிதுங்கிவிடுவார்கள். அங்கே மணிக்கணக்கில் போக்குவரத்துக்கு வழி இல்லை என்றால் என்னவாகும்? போரூர் சிக்னலில் அமைச்சர் பெஞ்சமின் பிரச்சாரம் செய்கிறார் என்றும், குன்றத்தூர் வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். அலுவலகம் விட்டு திரும்புகிறவர்கள், கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி மறுநாள் காலையில் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற நிலையில், அது முடியாமல் போகவே, ‘கொஞ்ச நேரம் தூங்கத்தான் வீட்டுக்கு போகிறோம். அதுக்கு உலை வைக்கிறானுங்களே பாவிங்க’ என்று திட்டத்தீர்த்தனர். சிலர் திட்டியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அவர்களுக்கு வந்த ஆத்திரம் அப்படி. அதனால்தான் அவர்கள் அப்படி ஆபாசமாக பேசி ஆத்திரத்தினை தீர்த்து கொண்டார்கள்.

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

வள்ளூவர் கோட்டம் ஐந்து முனை சிக்னலில் குஷ்பு பிரச்சாரம் செய்கிறார் என்று மாலை 4 மணிக்கு திடீரேன்று வாகனங்களை மாற்று வழி பாதையில் விட்டனர். அப்போது பஸ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் திட்டியதை மட்டும் குஷ்பு கேட்டிருந்தால்….?

ஆயிரம் விளக்கில் உதயநிதி பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட மன உளச்சலால், அங்கே பறந்த திமுக கொடியை காட்டி, இந்த கட்சிக்கு ஓட்டு போடமாட்டேன் என்றார் அந்த முதியவர்.

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

பிரச்சாரம் என்கிற பெயரில் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி மக்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர். வாக்கு சேகரிக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு வாக்குகளை இழக்கிறோம் என்பதை அவர்கள் எப்போது உணர்வார்கள்?

இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது. பிரச்சார கூட்டங்களால் மக்களுக்கு இடையூறு இல்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் அடாவடி:ரத்தக்கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்

அரசியல் கட்சிகளில் அடாவடி பிரச்சாரத்தினால் மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும்போது, அரசியல் கட்சிகளூக்கு பாதுகாப்பு கொடுத்து ஹி.. ஹி.. என்று இழித்துக்கொண்டிருக்கும் போலீசார் எப்படி உறுதி கொடுப்பார்கள்?