’’மக்கள் எங்கள் பக்கம்..’’-உறுதியாகச் சொல்லும் முதல்வர்

 

’’மக்கள் எங்கள் பக்கம்..’’-உறுதியாகச் சொல்லும் முதல்வர்

அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். வேளச்சேரிக்கு வந்து அதிமுகவுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

’’மக்கள் எங்கள் பக்கம்..’’-உறுதியாகச் சொல்லும் முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‘’வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அம்மாவின் அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் இப்பகுதி பாதிப்படைந்தது. அந்த நேரத்தில் நானே நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.’’என்று பேசினார்.

’’இத்தொகுதியில் 6 நகர்புற சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் 5 ஆண்டுகாலம் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தார். அப்போது இந்தப் பகுதியை பற்றி அவர் கவலைப்படவில்லை. அம்மாவின் அரசு மழைக்காலங்களில் பெய்கின்ற மழை நீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதற்காக தொடர்ந்து மழைநீர் கால்வாய்களை அமைத்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது’’என்றவர்,

’’மக்கள் எங்கள் பக்கம்..’’-உறுதியாகச் சொல்லும் முதல்வர்

’’சென்னை மாநகரில் 3000 இடங்களில் சென்னை மாநகரின் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது 33 இடங்களில் தான் தண்ணீர் தேங்க கூடிய நிலை இருக்கிறது. அதை வெளியேற்றுவதற்கு அம்மாவின் அரசு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் எளிய மக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றிடும் வகையில் 7 இடங்களில் மினி கிளிக்குகள் திறக்கப்பட்டுள்ளன ஸ்டாலின் திமுக கழகம் காணாமல் போய்விடும்’’’ என்று சாதித்தார்.

’’அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். வேளச்சேரிக்கு வந்து அதிமுகவுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் அதிமுக இயக்கம் தான் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம்’’என்றார் முதல்வர்.