முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

 

முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மூவர் மட்டுமே விழுந்து விழுந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மற்றபடி திமுக நிர்வாகிகளும் சரி, திமுக வேட்பாளர்களும் சரி பிரச்சாரம் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டாமல் மெத்தனம் காட்டி வருகிறார்கள். கருத்துகணிப்புகளால் வந்த தெனாவெட்டுதான அது.

முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

வேட்பாளர்களே இப்படி இருந்தால் திமுக தொண்டர்கள் எப்படி இருப்பார்கள். அதனால்தான் தொகுதிக்கு தொகுதி திமுகவின் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர்கள் திமுக காரர்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் இருக்கிறது. அது உண்மைதான் என்று சொல்லும்படியாக பிரச்சாரத்தில் வேட்பாளருடன் செல்வோருக்கு சாப்பாடு, டீ, காபி கூட வாங்கி கொடுப்பதில்லையாம் திமுக வேட்பாளர்கள். அதைக் கூட தங்களது சொந்த காசில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற நிலை இருக்கும்போது எந்த தொண்டர்கள் தான் வேட்பாளர்களின் பின்னால், அதுவும் இந்த வேகாத வெயிலில் சென்று அலைந்து திரிவார்கள். அதனால்தான் அவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் கட்சியின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று பலவற்றுக்கும் அவ்வப்போது செலவு செய்துவிட்டு அலுத்துக் கொண்ட நிலையில் இப்போது தேர்தலில் செலவு செய்ய யோசிக்கின்றனர் திமுக வேட்பாளர்கள்.

முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

இப்படி கணக்கு பார்க்கும் ஆட்கள் எதுக்கு சீட் வாங்க வேண்டும்? என்று கட்சியினரே கேட்கிறார்களாம்.

’கருத்துக்கணிப்புகள் பல திமுகவுக்கு சாதகமாக இருப்பதால் அந்த கருத்துக்கணிப்புகளை உண்மை என்று நம்பி எப்படியும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்றுதானே நீங்கள் செலவு செய்ய யோசிக்கிறீர்கள். கருத்துக்கணிப்புகள்தான் சொல்லிடுச்சே. அப்புறம் எதுக்கு நாங்கள் கொடி பிடித்துக்கொண்டு சுற்றணும்’ என்று திமுக வேட்பாளர்களை பார்த்து கேட்கிறார்களாம் தொண்டர்கள்.

முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்துக்காகவே, கிட்டத்தட்ட நாள்தோறும் கொடிபிடித்து உழைக்கும் அவர்களூக்கு ஒரு கூலி மாதிரிதான் அது. அதை எதிர்பார்த்துதான் பல சாமானிய தொண்டன்கள் இருக்கிறார்கள். அதுவும் கிடைக்காமல் போகவே, வேட்பாளர்களிடம் அவர்கள், ஆத்திரத்தை காட்டி வருகிறார்களாம்.

‘இருக்கிறதை எல்லாம் அவிழ்த்தாச்சு. கட்சி கொடுத்த அத அப்படியே உங்ககிட்ட கொடுத்திடுறேன். அதத்தான் என்னால செய்ய முடியும்’என்று வேட்பாளர்களூம் கைவிரித்து வரும் தகவல் ஸ்டாலினுக்கு போயிருக்கிறது.

மாவட்டம்தோறும் போன் போட்டு ஸ்டாலின் ஆத்திரத்துடன் விசாரிக்க, ’வடநாட்டு காரனை அழைத்து வந்து 300 கோடி 400 கோடி என்று அள்ளிக் கொடுக்கிறீங்க. சொந்தக்காரன் அதுவும் பத்து வருஷ காலமாக கைக்காசை போட்டு அழுதவனுக்கு இப்ப ஏதாவது செலவழிக்க கொடுத்தா என்ன… நீங்க எதுவும் கொடுத்தா தான் நாங்க கொடுக்க முடியும். இதுக்கு மேலும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று சூடாகவே சொல்லி வருகிறார்களாம்.

முதல்வர் கனவுக்கு வந்த வேட்டு: ஸ்டாலினை கவிழ்க்கும் கணிப்புகளும் கரன்சியும்

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின், கடைசி நேரத்தில் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. இப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லையே. அப்படியானால் இந்த முறையும் அவ்வளவுதானா என்று கடும் அதிர்ச்சிக்கு உள்ளானவர்,

திமுகவுக்கு செலவு செய்ய இருந்த சில முக்கிய புள்ளிகளில் வீடுகளிலும் ரைடு நடந்ததால் அவர்கள் தரப்பில் இருந்தும் பணம் வருவது தடை பட்டிருப்பதால் திமுக வேட்பாளர்களுக்கு பணத்தை கொடுக்கலாம் என்று ஸ்டாலின் நினைத்தாலும். முடியாத நிலை இருக்கிறது.

கடைசி நேர நெருக்கடியால் கையை பிசைந்து டென்சனில் இருக்குது அறிவாலயம்.