’’தப்பியது கொளத்தூரும், சேப்பாக்கம்- திருவெல்லிக்கேணியும் மட்டுமே’’

 

’’தப்பியது கொளத்தூரும், சேப்பாக்கம்- திருவெல்லிக்கேணியும் மட்டுமே’’

காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி. எஸ். டி வரியை பா. ஜ. க அரசு கொண்டுவந்ததாக நாமதான் ஏமாற்றுகிறோம்னு பார்த்தா, நம்ம வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு கொடுத்த 3கோடியில் ஜி. எஸ். டி வரியாக ரூ. 15இலட்சத்தை நம்ம கட்சிக்காரங்களே எடுத்து கொண்டு தான் கொடுத்திருக்காங்க. நம்மையே ஏமாத்திட்டாங்களே என்று ஸ்டாலின் அதிர்ச்சி! ஜி. எஸ். டி வரியில் இருந்து தப்பியது கொளத்தூரும், சேப்பாக்கம்- திருவெல்லிக்கேணியும் மட்டுமேன்னு சொல்றாங்கோ என்று தெரிவித்துள்ளார் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.

’’தப்பியது கொளத்தூரும், சேப்பாக்கம்- திருவெல்லிக்கேணியும் மட்டுமே’’

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவரான காயத்ரிரகுராம், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணியை அவர் கடுமையாக சாடி வருகிறார்.

‘’பெருந்தலைவர் காமராசரை கருவாட்டு காரி மகன் என்றும் அண்டங்காக்காய் என்றும் விமர்சித்தவர்கள் ஜெயலலிதாவின் தனிபட்ட வாழ்வை விமர்சித்தவர்கள் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தாயை தரக்குறைவாக விமர்சிக்கின்றார்கள். இவ்வளவு கீழ் தரமாக பேசிய ராசாவை கண்டிக்கவோ வருத்தம் தெரிவிக்கவோ மனமில்லாத ஸ்டாலினா பெண்களுக்கு சம உரிமை தர போகிறார். இவரா பெண்களை காக்க போகிறார்.தன் கட்சியினரையே தடுக்க முடியாத ஸ்டாலினா தமிழ் நாட்டை காக்கபோகிறார்?’’என்ற கேள்வியை எழுப்புகிறார்.