கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்

 

கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்

காலையில் வேளச்சேரியில் பிரச்சாரம், மதியம் கோவையில் நீர்நிலைகளைப் போற்றும் சிறுதுளி அமைப்பினரோடு ஓர் உரையாடல், மாலையில் மதுரையில் பிரச்சாரம், இரவில் மீண்டும் கோவைக்குத் திரும்பி மறுநாளைக்கான திட்டமிடல். மக்கள் துயர் தீரும் மட்டும் ஓயமாட்டேன். தலை சாய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்

அவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடுமையான போட்டியாளராக இருக்கிறார். இதனால் இருதரப்பினரும் பிரச்சாரத்தில் கடுமையான விளாசிக்கொள்கிறார்கள்.

கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்

அதனால்தான், வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது என்று தனது கவலையை தெரிவித்திருந்தர் கமல்.

கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்

இந்நிலையில் வானதி சீனிவாசனுக்காக உத்திரபிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதிக்கு வந்து வாக்கு சேகரித்தார். அதுகுறித்து கமல்ஹாசன், ‘’ஆதித்யநாத் வருகையின் போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான்.
“கலவர ஸ்பெஷலிஸ்டுகளை” ஒற்றுமையால் முறியடிப்போம்.

கமல் சொல்லும் கலவர ஸ்பெஷலிஸ்டுகள்