’’தேங்காய் சீனிவாசனும் திண்டுக்கல் சீனிவாசனும்…’’

 

’’தேங்காய் சீனிவாசனும் திண்டுக்கல் சீனிவாசனும்…’’

அவிநாசியில் திமுக வேட்பாளர் அதிகமானை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது, ’’அதிமுக காரன் சொல்றான்.. அதிமுக காரன் சொல்றான்..’’ என்று திரும்பத் திரும்ப ஒருமையில் சொல்லிக்கொண்டே இருந்தார். திமுகவினரே உதயநிதியின் அந்த ஒருமை பேச்சை ரசிக்கவில்லை என்பது அவர் பேசப் பேச முகம் சுளித்தபடி நின்றிருந்ததை பார்க்கும்போது தெரிந்தது.

’’தேங்காய் சீனிவாசனும் திண்டுக்கல் சீனிவாசனும்…’’

’’தேங்காய் சீனிவாசனை எல்லோருக்கும் தெரியுமா.. அவர் காமெடி நடிகர் திண்டுக்கல் சீனிவாசன் காமெடி அமைச்சர். அவர் இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் நாங்கள் கடைசி வரை அம்மாவை பார்க்கவே இல்லை. ஆனால் அவரை பார்த்ததாகவும் அவர் சாப்பிட்டதாகவும் பொய் சொல்லி விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனையில் எத்தனை சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அத்தனையும் எதற்காக என்றால் அங்கு நடக்கின்ற எந்த ஒரு சம்பவமும் பதிவாக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் ஜெயலலிதாவை அப்போலோவில் வைத்திருந்த போது ஒரு சிசிடிவி கேமராவும் இயங்கவில்லை என்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறதா ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று. அந்த மர்மத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளிக்கொண்டு வருவோம்.

’’தேங்காய் சீனிவாசனும் திண்டுக்கல் சீனிவாசனும்…’’

அம்மா இட்லி சாப்டுச்சு.. அம்மா உப்புமா சாப்டுச்சு.. அம்மா இட்லிக்கு சட்னி தொட்டு சாப்டிச்சு.. என்று சொல்லிக்கொண்டே வந்தவர்கள் கடைசியாய் ஒருநாள் அம்மா செத்துப் போச்சு என்று சொல்லிவிட்டார்கள். இந்த மர்மத்தை திமுக நிச்சயம் வெளிக்கொண்டுவரும்’’ என்றார்.

ஒரு செங்கல்லை தூக்கி காட்டி, ‘’இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இருந்த ஒரு கல்லையும் தூக்கிட்டு வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனையை காணோம் என்று புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மதுரை மக்கள். இந்த ஒரு செங்கலுக்கு 70 கோடி செலவு என்று சொல்கிறார்கள். இதைப்பற்றி ஒருவாரமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால், பிரதமர் இதுகுறித்து வாய்திறக்கவே இல்லையே ஏன்?’’என்று கேட்டார்.