ஆ.ராசா,லியோனியை சாடியை மோடி..காங். எம்.பிக்கு வந்த கோபம்

 

ஆ.ராசா,லியோனியை சாடியை மோடி..காங். எம்.பிக்கு வந்த கோபம்

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் அங்கே பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆ.ராசா,லியோனியை சாடியை மோடி..காங். எம்.பிக்கு வந்த கோபம்

பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பிரதமரின் பேச்சினை வானதி சீனிவாசன் மொழிபெயர்த்தார். பிரதமர் தனது பேச்சில் முதல்வரின் தாயை இழிவாக பேசிய ஆர்.ராசாவையும், பெண்களின் இடுப்பை பற்றி கேவலமாக பேசிய திண்டுக்கல் லியோனியையும் சாடினார்.

ஆ.ராசா,லியோனியை சாடியை மோடி..காங். எம்.பிக்கு வந்த கோபம்

’’பெண்களை இழிவுபடுத்துவதே திமுக – காங். கலாச்சாரம். எதிரணியை அவமானப்படுத்துவது, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் வேலையில் திமுக இறங்கியுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வேலையை தற்போது எதிரணியினர் ஏவியுள்ளனர். முதல்வர் பழனிச்சாமியின் தாயார் பற்றி திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது. பெண்கள் குறித்து திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்த்திருக்கிறார். திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவார்கள்?’’என்ற கேள்வியை எழுப்பினார் மோடி.

ஆ.ராசா,லியோனியை சாடியை மோடி..காங். எம்.பிக்கு வந்த கோபம்

இதுகுறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’பொள்ளாச்சியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் கதறல் இப்போது நினைத்தாலும் நெஞ்சை உறையவைக்கிறது. அதில் தொடர்புடைய அதிமுக தலைவர்களை காப்பாற்றும் எடப்பாடி பழனிசாமியும், நரேந்திர மோடியும் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதற்கு வெட்கப்படவேண்டும்’’என்கிறார்.