காங்., நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு..தலைவராகிறாரா ஜோதிமணி?

 

காங்., நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு..தலைவராகிறாரா ஜோதிமணி?

இருபத்து இரண்டு வயதில் காங்கிரசில் நுழையும்போதே ராகுல்காந்தியின் நேரடி கண்காணிப்பில் இருந்தவர் ஜோதிமணி. காங்கிரஸ் சார்பில் வடமாநிலங்களில் கடுமையாக உழைத்ததால்தான், தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவராகவும், தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் ஆனார்.

காங்., நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு..தலைவராகிறாரா ஜோதிமணி?

தொடக்கம் முதற்கொண்டே ராகுல்காந்தியின் நேரடி தொடர்பில் இருப்பதால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிமணியை எதுவும் செய்யமுடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிமணிக்கு சீட் இல்லை என்று தமிழக காங்., தலைவர்கள் முடிவெடுத்திருந்தபோதும் கூட, டெல்லியில் இருந்து வந்த உத்தரவினால் ஜோதிமணிக்கு சீட் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

கரூர் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல்காந்தியை சைவ பிரியாணி சமைக்க வைத்து அது வலைத்தளங்களில் வைரல் ஆனதால், ராகுலின் மனதில் அதிகமாக இடம்பிடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், ராகுல் வந்தபோது அவரை மாட்டு வண்டியில் அமரவைத்து ஜோதிமணி ஓட்டிச்சென்றார். களப்பணிகளில் இத்தனை தீவிரம் காட்டி வருவதால்தான் மேலிடத்தில் ஜோதிமணிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் டெல்லி செல்லும்போதெல்லாம் சோனியாவையும், ராகுலையும் சந்தித்து பேசி வருகிறார்.

காங்., நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு..தலைவராகிறாரா ஜோதிமணி?

தலைமையிடம் நேரடி தொடர்பு இருப்பதால்தான் தமிழக தலைவர்களை துணிந்து எதிர்த்து வருகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 சீட் ஒதுக்கியபோது, அது அத்தனையும், கட்சியின் வாரிகளுக்கும், பிரபலங்களுக்கும் விலை பேசி கொடுத்துவிட்டார்கள். இதை சும்மா விடமாட்டேன். இந்த அநீதியை எதிர்த்து கடைசிவரை போராடுவேன் என்று சொன்னதோடு அல்லாமல், தலைமயிடமும் சொல்லிவிட்டாராம் ஜோதிமணி.

காங்., நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு..தலைவராகிறாரா ஜோதிமணி?

இதனால் கடுப்பில் இருக்கும் தலைவர்கள், ஜோதிமணியை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். பிரச்சார பீரங்கி என்று சொல்லுமளவுக்கு இருக்கும் ஜோதிமணியை பிரச்சாரத்திற்கு கூப்பிடக்கூடாது என்று ரகசிய உத்தரவு பறந்திருக்கிறதாம்.

அதனால், கரூர், அரவக்குறிச்சி, மணப்பாறை என்று தன் ஏரியாவை சுற்றிலும் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஜோதிமணி. சிலர் அழைத்தபோதும் கூட, என்னால் அப்புறம் உங்களுக்கு தலைவலியாகிவிடும் என்றூ சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டாராம்.

தேர்தல் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட இருக்கிறார்கள். ஜோதிமணி தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவரை இப்போதே கட்டம் கட்டுகிறார்கள் என்கிறர்கள் கரூர் காங்கிரசார்.