திண்டுக்கல் லியோனிக்கு தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்; முதல்வர் ஆவேசம்

 

திண்டுக்கல் லியோனிக்கு தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்; முதல்வர் ஆவேசம்

கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் செய்தபோது , “நாட்டு மாடு பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதி போய்விட்டார்கள். ஒரு காலத்துல பெண்களுடைய இடுப்பு எட்டு மாதிரி இருக்கும் பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்து உட்கார்ந்து கொள்ளும் . ஆனால் நாட்டு மாடு குடித்து பெண்கள் இடுப்பு என்று பேரல் மாதிரி ஆகிவிட்டது. பிள்ளை இடுப்புல இருந்து வழுக்கிட்டு போகுது” என்றார்.

திண்டுக்கல் லியோனிக்கு தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்; முதல்வர் ஆவேசம்

திண்டுக்கல் ஐ லியோனின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது கடுமையாக சாடினார். அவர், ‘’திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கோவையில் நடந்த பிரச்சாரத்தில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். திமுக என்றாலே பெண்களுக்கு கொடுமை இழைக்கக்கூடியவர்கள்தான். ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள். பெண்களின் இடுப்பை சம்பந்தப்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் லியோனி. திண்டுக்கல் லியோனிக்கு இந்த தேர்தல் மூலமாக நீங்கள் தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்.

திண்டுக்கல் லியோனிக்கு தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்; முதல்வர் ஆவேசம்

பெண்களை இப்படி கீழ்த்தரமாக பேசும் பேச்சாளரை தட்டிக்கேட்க திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின். ஆட்சியில் இல்லாதபோதே திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் இப்படி பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடித்தி பேசுவது, ஆபாசமாக பேசுகிறார்களே. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் எப்படி நடமாட முடியும்?

திண்டுக்கல் லியோனிக்கு தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும்; முதல்வர் ஆவேசம்

இது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம். அதனால் இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் தகுந்த பாடம் புகற்ற வேண்டும் என்று உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார் ஆவேசமாக.