இளைஞர் கேட்ட கேள்வி… சிரித்துக்கொண்ட சீமான்

 

இளைஞர் கேட்ட கேள்வி… சிரித்துக்கொண்ட சீமான்

பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்த நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், நீங்க ஆட்சிக்கு வந்தால் என்ன இலவசம் கொடுப்பீங்க? என்று இளைஞர் ஒருவர் கேட்க, சிரித்துக்கொண்ட சீமான், ‘’நான் ஆட்சிக்கு வந்தால் அரிசி இலவசம் இல்லை. மிக்ஸி இலவசம் இல்லை. டிவி இலவச இல்லை. வாசிங் மெசின் இல்லை. ஆனால், இதை எல்லாம் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு உங்கள் வசதியை பெருக்கிவிடுவேன்’’என்றார்.

இளைஞர் கேட்ட கேள்வி… சிரித்துக்கொண்ட சீமான்

அடுத்து, ‘’நான் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடையை திறப்போம்; டாஸ்மாக்கை மூடிவிடுவோம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கேதான் ரெண்டு கட்சிக்கும் டாஸ்மாக் ஆலை இருக்குது. அதை விற்கத்தான் தெருவுக்கு தெரு டாஸ்மாக் இருக்குது. அதை ஒழிக்கணும் என்றார் ஆவேசமாக.

ஊரெல்லாம் அந்த கிழவன் பள்ளிக்கூடம் கட்டி வைத்தான். இவனுங்க ஊரெல்லாம் டாஸ்மாக்கை திறந்துவிட்டுட்டானுங்க. சீமானும் அந்த பள்ளியிலதான் படிச்சிருக்காருன்னு சொல்லுறாங்க. ஏன் ஸ்டாலின் படிக்கலையா? எழுதி வைத்ததையே ஸ்டாலின் மேடையில் ஒழுங்கா படிக்க மாட்டேங்குறாரே என்று சொல்லிவிட்டு, ’’தண்ணியில லாரிய விடுவான் நம்மாளு.. பூனை மேல மதில நாட்டுவா நம்மாளு.. அட, சீனி சக்கர சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்று சீமான் பாடிவிட்டு கலகலவென்று சிரித்தார்.

தொண்டர்கள் அனைவரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.