ஜெ.,வுக்கு பிறகு பன்னீர்செல்வமா முதல்வர் ஆனார்? சசிகலாதானே முதல்வரானார்: உளறிக்கொட்டிய திமுக சீனியர்

ஜெ.,வுக்கு பிறகு பன்னீர்செல்வமா முதல்வர் ஆனார்? சசிகலாதானே முதல்வரானார்: உளறிக்கொட்டிய திமுக சீனியர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை உளறிக் கொட்டுவதைப்போலவே அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் உளறிக்கொட்டியிருக்கிறார்.

ஜெ.,வுக்கு பிறகு பன்னீர்செல்வமா முதல்வர் ஆனார்? சசிகலாதானே முதல்வரானார்: உளறிக்கொட்டிய திமுக சீனியர்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த ஆர்.எஸ்.பாரதி, திமுக மீதான வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கிறேன் என்கிற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘’எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆர்.எம்.வீரப்பனா முதலமைச்சர் ஆனார். ஜானகிதானே முதலமைச்சர் ஆனார். அதன்பின்னர் எம்.ஜி.ஆருடன் 25படங்களில் நடித்த ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஜெயலலிதா செத்தபிறகு பன்னீர்செல்வமா முதல்வராக வந்தார்? இல்லை பொன்னையன் வந்தாரா? முந்திரிக்கொட்டை போல பேசிக்கொண்டிருக்கிறாரே அந்த ஜெயக்குமாரா வந்தார். சசிகலாதானே வரமுடிந்தது’’ என்று சொல்ல கூட்டத்தினரிடையே சலசலப்பு எழுந்தது.

ஜெ.,வுக்கு பிறகு பன்னீர்செல்வமா முதல்வர் ஆனார்? சசிகலாதானே முதல்வரானார்: உளறிக்கொட்டிய திமுக சீனியர்

ஓபிஎஸ் முதல்வராக இருந்தது கூட தெரியாமல் ஆர்.ஸ்.பாரதி பேசிவிட்டாரே என்று கட்சியினரே அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சசிகலா எப்போது முதல்வர் ஆனார் என்றும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டதால் சலசலப்பு அதிகமானது.

அதன்பின்னர் ஆர்.எஸ்.பாரதி, ‘’ இவர்கள் யாருக்கும் வாரிசு இல்லை. அதனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனது ஒரு விபத்து. விபத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஆனார் பழனிச்சாமி’’என்றார்.

சசிகலாதான் முதல்வர் ஆனார் என்று இப்படி உளறிக்கொட்டியதை, பெயரளவில் ஓபிஎஸ் என்றாலும், பின்னணியில் சசிகலாதானே இருந்தார். அதனால்தான் அப்படிச்சொன்னேன் என்று நாளை ஆர்.எஸ்.பாரதியும் திமுகவினரும் சமாளிப்பார்கள் என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது.