’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாய் தவுசாயம்மாள் குறித்து திமுக துணை செயலாளர் ஆ.ராசா இழிவாக பேசியதற்கு தமிழகம் முழுவதும் கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என் தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவுக்கு அந்த கடவுள் தண்டனை கொடுப்பார் என்று முதல்வரும் சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார். இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்நிலையில், கோவில்பட்டியில் பிரச்சாரத்தின்போது செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’இந்து மதத்தினையும் பெண்களையும் இழிவுபடுத்துவதை காலம் காலமாக செய்துவருகிறது திமுக. 1989ல் மார்ச் 25ம் தேதி அன்று சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களால் ஜெயலலிதா மானபங்கபடுத்தப்பட்டார். திமுகவினர் தரம் அப்படித்தான் இருக்கும்.

’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்த விசயத்தில் ஆ.ராசா முதன்மையானவராக இருக்கிறார். பெண்களைப்பற்றி அதிமுகவில் இருந்து யாராவது இப்படி பேசினால் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனே நீக்கப்பட்டிருப்பார். திமுகவிற்கு அந்த தைரியம் இல்லை. ஆ.ராசாவை திமுகவை விட்டு நீக்கினால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியே வரும். அப்புறம் மொத்த குடும்பமு உள்ளே போக வேண்டியது வரும். திமுகவே அழிந்துவிடும். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க முடியாது.

’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசக்கூடடிய கனிமொழி இதற்கு என்ன சொல்லப்போகிறார்? அதுசரி, ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை நாம் எதிர்பார்க்கவும் கூடாது’’என்றார்.

’’ஆ.ராசா பற்றி கனிமொழி எப்படி சொல்வார்? அதை எதிர்பார்க்கவும் கூடாது’’- அமைச்சர் கடம்பூர் ராஜூ