Home அரசியல் 'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

‘A’.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

கொஞ்சம் விட்டிருந்தா சசிகலா காலுக்குள் புகுந்திருப்பாரு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக பேசுவதாக நினைத்து, தன்னுடைய தரம் இதுதான் என்பதை எல்லோருக்கும் எடுத்துச்சொன்னார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி. அதற்கெல்லாம் உச்சமாக பேசியிருக்கிறார் திமுக மூத்த நிர்வாகி ஆ.ராசா.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!
'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஆ.ராசா, ’’ஓராண்டு காலம் அவர் கொடுத்த விளம்பரத்தால் அதில் கிடைத்த லாபத்தால் இன்றைக்கு இருக்கின்ற இவாள் பத்திரிகைகள் எல்லாம், அவரை மிகப்பெரிய தலைவர் போல் சித்தரிக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி? என்ன தியாகம்? பொதுவாழ்க்கையில் அவர் எட்டியிருக்கும் தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது. நல்ல உறவில் ஆரோக்கியமான உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை நம்முடைய தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிச்சாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார்” என்று பேசி இருந்தார்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

ஆ.ராசா பேசிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசும் பேச்சா இது? ஏன் இத்தனை கீழ்த்தரமாக இவர் கீழிறங்கி ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கொதித்தெழுந்தனர்.

திமுக எம்.பி. கனிமொழியே இதை வன்மையாக கண்டித்தார். ’’அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்’’என்று ஆ.ராசாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும், ‘’தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்’’என்று ஆ.ராசாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

“திமுகவின் ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசியிருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் ஆ. ராசா இப்படி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும். இன்னும் ஒருசில நாட்களில் ஊட்டி தொகுதியை இழக்ககூடிய கிரிமினல் குற்றவாளி ராசா பெண்மையை மதிக்காமல் பேசியுள்ளதை பாஜக கண்டிக்கிறது. தி.க, திமுகவின் டிஎன்ஏவே இதுதான். பெண்களை போகப்பொருளாக கருதி, தினந்தோறும் விலை மாதர்களின் வீடுகளில் இருந்தவர்கள் இப்படிதான் பேசுவார்கள். முதல்வரின் தாயாரை இழிவாக பேசியதற்காக ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் போகும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த விவகாரத்தை பாஜக சும்மாவிடாது” என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

’’திமுக தலைவர் ஒரு அரசியல் வியாபாரி . அரசியல் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூறலாம். ஆனால் ஒருவரின் தாயை பற்றி அவதூறாக பேசுவது தவறு. ஆகவே நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். திமுக என்றால் தாய்மைக்கு எதிரான ஒரு கட்சி தான் ;பெண்மையையும் ; தாய்மையையும் மதிக்கத் தெரியாதவர்கள். ஆ ராசா போல யாராவது எங்கள் கட்சியில் அப்படி பேசி இருந்தால் நாங்கள் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கி இருப்போம். ஆ. ராசா திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பெண்களை குறித்து அவதூறாக பேசி பேசி கொண்டு வருகின்றனர் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’என்கிறார் பாஜக அன்புணி ராமதாஸ்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

’’ஒரு பெண்ணையும் தாய்மார்களையும் இழிவுபடுத்துவது நாட்டையும் தாய் மண்ணையும் அவமதிப்பது போன்றது. தாய் அனைவருக்கும் கடவுள், இந்த பூமியில் உள்ள அனைத்து பெண்களும் தான். பெண்கள் பற்றிய அவதுறான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரு தலைவன் ஒரு பெண்ணைப் பற்றி அபத்தமான கருத்தை பேச முடிந்தால், மற்ற ஆண்களும் அதைப் பின்பற்றுவார்கள. பாடம் கற்பிக்க வேண்டும்’’என்று ஆவேசமாகிறார் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

ஆ.ராசவா? ஆபாச ராசாவா? ‘A’.ராசா என்றெல்லாம் பாஜகவினர் ராசாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

'A'.ராசா! முதல்வரின் தாயை இழிவுபடுத்தியதால் கொந்தளிக்கும் பாஜக!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews