திண்டுக்கல் ஐ. லியோனிக்கு கனிமொழி கண்டனம்

 

திண்டுக்கல் ஐ. லியோனிக்கு  கனிமொழி கண்டனம்

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தீவிர பிரச்சாரம் செய்து வரும் லியோனி, தொண்டாமுத்தூர்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டுப்பாலை குடித்து வளர்ந்த அந்த காலத்து பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்து கொள்ளும், ஆனால் இப்போது வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து குடித்து நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய்ட்டாங்க. இப்போது பெண்கள் இடுப்பு பேரல் மாதிரி பெருத்துக்கிடக்கிறது. பிள்ளையை தூக்கி வச்சா வழுக்கிக்கொண்டு ஓடுகிறது” என நக்கலடித்தார்.

திண்டுக்கல் ஐ. லியோனிக்கு  கனிமொழி கண்டனம்

லியோனியின் இந்த பேச்சுக்கு பெண்களிடையே கடும் கண்டம் எழுந்தது. இது பெரும் சர்ச்சை ஆகி திமுகவுக்கு பெருத்த அவமானத்தை தேடித்தந்தது.

திண்டுக்கல் ஐ. லியோனிக்கு  கனிமொழி கண்டனம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், ’’இப்படி பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லாருமே செக்ஸிஸ்ட் ( sexist )ஆக இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் லியோனி கண்ணாடியை பார்த்து பல நாள் இருக்கும் போலிருக்கிறது. அவர் இடுப்பே அப்படிதான் இருக்கு. உதாரணத்துக்கு அதையே சொல்லி இருக்கலாம்; ஆனா பொண்ணுங்க கிட்ட தான் வருவாங்க ” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ’’அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்’’ என்று கண்டம் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.