’’கள்ளக்காதலனுடன் பேச ஓபோ போன் இலவசம்; இளைஞர்கள் சைட் அடிக்க தினமும் ஒரிஜினல் பிராந்தி இலவசம்’’

 

’’கள்ளக்காதலனுடன் பேச ஓபோ போன் இலவசம்; இளைஞர்கள் சைட் அடிக்க தினமும் ஒரிஜினல் பிராந்தி இலவசம்’’

நான் வெற்றிபெற்றால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறூம் 25 ஆயிரம் வழங்கப்படும். இளைஞர்களின் உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் கூட்டும் வகையில் அவர்கள் பெண்கள் தேடி வந்து சைட் அடிக்க பாண்டிச்சேரியில் இருந்து ஒரிஜினல் பிராந்தி வாங்கி வந்து வழங்கப்படும். குடும்ப அட்டைக்கு ஒரு செல்போன் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுத்தி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அந்தியூர் தொகுதியின் வேட்பாளர் சேக் தாவூத்.

’’கள்ளக்காதலனுடன் பேச ஓபோ போன் இலவசம்; இளைஞர்கள் சைட் அடிக்க தினமும் ஒரிஜினல் பிராந்தி இலவசம்’’

40 வருடமாக தன்னை தோற்கடித்தாலும் மனம் தளராமல் இந்த முறையும் களத்தில் இறங்கியிருக்கும் சுயேட்சை வேட்பாளர்தான் சேக் தாவூத்.

போனமுறை 220 ஓட்டுதான் போட்டிருக்கீங்க. அடப்பாவிகளா… என்று தொகுதி மக்களை வறுத்தெடுத்து வரும் அவர், 40வருசமாக இந்த தொகுதி மக்கள் என்னை தோற்கடிச்சிட்டாங்க. நல்ல நல்ல வாக்குறுதிகள் கொடுத்தும் என்னை கண்டுக்கல. அந்த கடுப்பில்தான் கேலிக்குறிய வாக்குறுதிகளை கொடுக்கிறேன் என்று செம கடுப்பில் பேசி வருகிறார் வேட்பாளர் சேக் தாவூத்.

’’நான் வெற்றிபெற்றால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறூம் 25 ஆயிரம் வழங்கப்படும்அதே போல அவங்க, தாய்புள்ளைக்கு பேசலாம்; கள்ளக்காதலனுக்கு பேசலாம். சொந்தக்காரங்களுக்கு பேசலாம். அண்ணன், தம்பிக்கு பேசலாம். அட, அப்படியாவது எனக்கு ஒரு கால் ஆவது வராதான்னு பார்க்கத்தான் எல்லோருக்கும் ஓபோ போன் இலசமா தர்றேன். கூட்டுறவு வங்கியில் எந்த கடன் வாங்கியிருந்தாலும், வீட்டுக்கு வாங்கியிருந்தாலும் சரி, காட்டுக்கு வாங்கியிருந்தாலும் சரி, 10 லட்சம் வரைக்கும் கடனை தள்ளுபடி செய்யச்சொல்லுறேன்.

’’கள்ளக்காதலனுடன் பேச ஓபோ போன் இலவசம்; இளைஞர்கள் சைட் அடிக்க தினமும் ஒரிஜினல் பிராந்தி இலவசம்’’

18வயது நிரம்பிய இளைஞர்கள் எல்லோருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். எல்லோரும் எனக்கு ஓட்டு போடுங்க. 150 ரூபா கொடுத்து இத்துப்போன இந்த சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க.
படிச்சு களைச்சுபோற உங்களுக்கு நான் பாண்டிச்சேரியிலிருந்து ஒரிஜினல் சரக்கு வாங்கிட்டு வந்து தர்றேன். ஒரு லிட்டர் பிராந்தி தினசரி இலவசமாக வழங்கப்படும். அத குடிச்சா உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும். கலர் கூடும். பொண்ணுங்க தேடி வந்து லவ் பண்ணுவாங்க.’’என்றார்.

என்னடா, எம்.ஜி.ஆர்.ரசிகர் என்று சொல்லுகிறார். அவர் கொள்கைக்கு மாறாகவே பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ‘’நான் சிகரெட் குடிக்க மாட்டேன். எனக்கு சரக்கு பழக்கம் எல்லாம் இல்ல. ஸ்டெப்னி எதுவும் இல்ல. ஆனா, உங்களூக்காக உழைப்பேன். உங்கள் தேவையை நிறைவேத்துறேன். எனக்கு ஓட்டுப்போடுங்க’’என்றார்.