’’ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை..’’

 

’’ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை..’’

தேர்தல் பிரச்சாரம் என்றால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாகிவிட்டது. வயது வித்தியாசம், ஆண் – பெண் வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு திட்டும் மனோபாவம்தான் எல்லோரிடத்திலும் இருக்கிறது. எதிரெதிர் நிற்கும் போட்டாளர்கள் தங்களுக்குள் விமர்சனம் செய்துகொள்வதோடு அல்லாமல் அவர்கள் வீட்டுப்பெண்களையும் இழுத்து பேசுவது அநாகரிகமான ஒன்று. வெற்றியை பறிக்க வெறித்தனமாக ஓடும் எவரும் இந்த நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

’’ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை..’’

அந்த அதிருப்தியைத்தான் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் வெளிப்படுத்துகிறார்.

’’பத்து சதவீகிதம் உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு சட்டவிரோதம் இல்லை. ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10% இடஒதுக்கீடு சட்டவிரோதமென மோடிஅரசு நீதிமன்றத்தில் சொல்கிறது. நமது பிள்ளைகள் எப்படியும் படித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது பிஜேபி. விழித்துக்கொள்வோம்’’ என்று பிஜேபிக்கு எதிராக சொல்லும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பொதுவாகவே தேர்தல் பிரச்சாரத்தில் சந்திக்கும் பிரச்சனையினையும் பொதுவாகவே முன்வைத்திருக்கிறார்.

’’ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை..’’

’’தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்’’என்கிறார்.