யாருக்கு எத்தனை சீட்? ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

ரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று நடக்கிறது. நாளையுடன் பிரச்சாரம் ஓய்வதால் உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறார்கள் வேட்பாளர்களும், தலைவர்களூம்.

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

அதிமுக – திமுக இரண்டு கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, கூட்டணி கட்சிகளுக்கு முழுமையாக தொகுதிப் பங்கீட்டை முடித்த பிறகு, ஆ.ராசா முதல்வரின் தாயார் பற்றி அவதூறாக பேசிய பிறகு, அதற்கு மனம் திறந்து மன்னிப்பு கோரிய பிறகு, சில ஊடகங்கள் அடுத்து திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட பிறகு, இதனால் சோர்வடைந்த கட்சி நிர்வாகிகளுக்கு பொலிரோ கார் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை எடப்பாடியார் வாய் மொழியாக அறிவித்த பிறகு, ’தமிழக அரசியல்’வார இதழ் சார்பில் 234 தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என மக்கள் மனதில் உள்ளதை அறிந்து அந்த கள நிலவரத்தை அப்படியே பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஓபிஎஸ் – போடிநாயக்கனூர்:

கடந்த 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. போடிநாயக்கனூர் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஓபிஎஸ் இன் அரசியல் எதிரியான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதால் அரசியல் பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது போடி தொகுதி. இங்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்க கடுமையாக போராடி வருகிறார் அமமுக சார்பாக போட்டியிடும் முத்துசாமி. ஆனால் கஜா புயல் கொரோன வைரஸ் காலங்களில் தமிழகத்திலேயே அதிக தனிநபர் உதவிகளை பெற்றது போடி தொகுதி தான். அதற்கு காரணம் ஓபிஎஸ் தவிர ஓபிஎஸ் உடன் சேர்ந்து அவரது மகன்களும் தங்கள் சொந்தப் பணத்தை வாரி வழங்கி உதவி செய்ததை தொகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆகவே வன்னியர் இட ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர் பிரச்சனை ஆகியவை அவ்வப்போது தலை தூக்கிய போதும் திமுகவும் அதிமுகவும் என்னதான் தீவிரமாக பிரச்சாரம் செய்த போதும் இங்கு ஹாட்ரிக் அடித்திருக்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

ஈபிஎஸ் – எடப்பாடி:

அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திமுக சார்பாக சம்பத்குமார் போட்டியிடுகிறார்கள். எடப்பாடி தொகுதியில் இதில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே போட்டி நிலவி வருகிறது. முதல்வர் நன்கு மக்களால் அறியப்பட்டவர். அதிகார பலம் மிக்கவர். தொகுதியில் சிறுபான்மையாக வாழக்கூடிய வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்.

சம்பத் குமார் தொகுதி மக்களால் அறியப்படாத புதுமுக இளைஞர். எடப்பாடி தொகுதியை பொறுத்த அளவில் முதல்வர் எடப்பாடியார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

ஸ்டாலின் – கொளத்தூர்:

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். ஒரு கட்சியின் தலைவராக இருந்த போதிலும் அவ்வப்போது கொரோனா காலகட்டங்களிலும் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். இத்தொகுதியில் மக்களின் குறைகளை தீர்க்க சேகர்பாபு தலைமையில் குழு அமைத்து குறைகளை தீர்த்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு புதியவர். எனவே கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் மு. க .ஸ்டாலின் வெற்றி பெறுவது உறுதி.

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

யாருக்கு எத்தனை சீட்?

அதிமுக கூட்டணி -123+

திமுக கூட்டணி – 97+

இழுபறி – 14

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!

மீண்டும் அதிமுக!

தமிழக அரசியல் வார இதழ் 234 தொகுதிகளிலும் நடத்திய இறுதி நிலவரம் பற்றிய கருத்துக்கணிப்பின்படி 123 தொகுதிகளுக்கு மேல் பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகிறார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் துணை முதல்வராகிறார்.

யாருக்கு எத்தனை சீட்?  ’தமிழக அரசியல்’நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் 234 தொகுதிகளின் இறுதி நிலவரம்!