விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது

விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது

கட்சியின் பிறந்தநாள் நிகழ்ச்சி உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் தவிர வேறு எதிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார் விஜயகாந்த். பிரச்சாரத்திற்காவது வருவாரா? என்ற கேள்விக்கு, ‘’கேப்டன் நிச்சயம் பிரச்சாரத்திற்கு வருவார்’’ என்று சொல்லிக்கொண்டே வந்தார் பிரேமலதா விஜயகாந்த். அதன்படியே, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது

இதில் ஒரு புதுமை என்னவென்றால், கொஞ்ச நேரம் பிரச்சார வேனில் நின்று கையை அசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விஜயகாந்த்,வேனில் அமர்ந்தபடியே தொண்டர்களுக்கு கைகளை தூக்கி வணக்கம் வைத்தபடியே செல்கிறார். பின்னணியில் கடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவர் பேசிய பேச்சுக்களை ஒலிக்க விடுகிறார்கள்.

விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது

கேப்டன்..கேப்டன்.. என்று ஓங்கி குரல் எழுப்பி விசில் பறக்க விடுகிறார்கள். விஜயகாந்த் பேசியிருந்தல் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது போலிருக்கிறது.

விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலிவடைந்த பின்னர் அதுவும் இந்த கொரோனா நேரத்தில் அவர் வெளியே வந்து பிரச்சாரம் செய்ததே ஒரு கம்பீரம்தான். இதில் அவர் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? கேப்டன் கேப்டன் தான் அவருக்கு இருக்கும் துணிச்சல்..அந்த கெத்து.. இன்னும் அப்படியேதான் இருக்குது என்று நெகிழ்ந்து போகிறார்கள் தேமுதிகவினர்.

விஜயகாந்த் பேசியிருந்தால் கூட இத்தனை ஆரவாரம் இருந்திருக்காது…அந்த குரல் ஒலித்ததும் விசில் பறக்குது