அண்ணாமலைக்காக நமீதா.. முருகனுக்காக காயத்ரி..

 

அண்ணாமலைக்காக நமீதா.. முருகனுக்காக காயத்ரி..

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகனுக்காக இன்று நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். அதுபோலவே பாஜவின் துணைத்தலைவரான அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக நடிகை நமீதா வாக்கு சேகரித்தார்.

அண்ணாமலைக்காக நமீதா.. முருகனுக்காக காயத்ரி..

’’அண்ணாமலை ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி. இந்த தொகுதியை சேர்ந்தவர். இந்த காய்ந்த மண்ணை செல்வ செழிப்பாக மாற்ற படித்த அதிகாரியால்தான் முடியும். ஆகவே அண்ணாமலையை தேர்ந்தெடுங்கள்’’ என்ற நமீதா, ‘’மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் வரவேண்டும்’’ அவருக்கு ஆதரவை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அண்ணாமலைக்காக நமீதா.. முருகனுக்காக காயத்ரி..