தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா

 

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா

தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விருத்தாசலம் வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரம் செய்து வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு அழைத்தனர். ஆனால், பிரேமலதா பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா


பிரச்சாரத்தில் இருப்பதால் வரமுடியாது என்று தடலடியாக சொல்லிவிட்டார். தொண்டர்களும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், பிரேமலதாவுக்கு மீண்டும் கொரோனாவா? என்ற சலசலப்பு பிரச்சாரத்தில் எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விஜயகாந்த் கடந்த செப்டம்பர் மாதத்தில் லேசான கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று வந்து அவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமலதாவுக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றனர்.

பின்னர் இதை உணர்ந்த பிரேமலதா சோதனைக்கு சென்றார். பரிசோதனையை அடுத்து இன்று பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பார்த்தசாரதி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.