‘’பழச எல்லாம் கிளருவாங்க, அது ஸ்டாலினுக்கு கடுப்பாவுமில்ல’’

 

‘’பழச எல்லாம் கிளருவாங்க, அது ஸ்டாலினுக்கு கடுப்பாவுமில்ல’’

இப்படி ஏதேனும் ஒரு திட்டத்தை பிஜேபி தமிழகத்திற்கு கொண்டுவந்திருக்கிறதா? என்று கேட்டு, தமிழக மக்களின்நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள் என, ஒருபட்டியலை வெளியிட்டுள்ளார் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

‘’பழச எல்லாம் கிளருவாங்க, அது ஸ்டாலினுக்கு கடுப்பாவுமில்ல’’

அதில், நெய்வேலி நிலக்கரித்திட்டம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சேலம் இரும்பு உருக்காலை என்று பட்டியலிட்டு, என் காங்கிரஸ் என் பெருமை என்று பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவுக்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். ’’இதெல்லாம் நேருகாலத்து மேட்டர். திமுக – காங் 10 வருட கூட்டணி ஆட்சில ஒரு காப்பிக்கொட்டை அரைக்கிற கம்பெனிகூட வரல. ஆமா…ஸ்டெர்லைட் யாரு கொண்டுவந்தது?அதை சொல்லு தங்கச்சி.’’என்கிறார் ஆர்.வேங்கடசுப்பிரமணி.

‘’பழச எல்லாம் கிளருவாங்க, அது ஸ்டாலினுக்கு கடுப்பாவுமில்ல’’

’’இதை எல்லாம் கொண்டு வந்த காமராஜரை ‘எருமைத்தோலர்’ என கிண்டல் செய்து தோற்கடித்த கட்சியோட இப்ப கூட்டணி வச்சிகிட்டு நீங்க இப்படி பேசலாமா? அப்பறம் நெட்டிசன்ஸ் பழச எல்லாம் கிளருவாங்க, அது ஸ்டாலின் அவர்களுக்கு கடுப்பாவுமில்ல’’ என்கிறார் முனியாண்டி.

’’ஆமா ஆமா 2ஜி மெகா ஊழல், காமன் வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், கச்சத்தீவு தாரை வார்ப்பு, ஈழ தமிழர் படுகொலை, நேசனல் ஹரால்ட் ஊழல், போபர்ஸ் ஊழல்
இந்த மாதிரி திட்ட மெல்லாம் கொண்டு வராத பிஜேபியை வன்மையாக கண்டிக்கிறேன் மேடம்’’ என்கிறார் அமர்நாத்.

’’மீத்தேன் ஹைட்ரோ கார்பன் ஸ்டெர்லைட் போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தமிழகத்தில் நாசகார காங்கிரஸ் திமுக அரசாங்கம் கொண்டு வந்தது’’என்றும் ஜோதிமணியின் கருத்துக்கு பதில் பதிவி போட்டு வருகிறார்கள்.