Home சினிமா குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

சென்னை சூளைமேட்டில் ஒரு ஆட்டோவில் சடலமாக கிடந்த நடிகர் ‘விருச்சிக காந்த்’பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது மர்ம மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிரவைத்திருக்கிறது.

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி
குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றான ‘காதல்’படத்தில் விருச்சிககாந்த் என்ற கேரக்டரில் நடித்தவர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் டைரக்டரிடம், பல்வேறு கெட்டப்களில் இருக்கும் தனது புகைப்படத்தினை காட்டி வாய்ப்பு கேட்பார் பாபு. முதல் படமே கில்லி மாதிரி ஒரு படம் பண்ணனும்னு சொல்லுவார். ப்ரண்ட்ஸ் கேரக்டர் மாதிரி எல்லாம் சின்னச்சின்ன ரோல் வேண்டாமா என்று கேட்க, இல்ல சார் ஸ்டிரெயிட்டா ஹீரோதான் என்று சொல்லுவார் பாபு. தனது பெயரையும் ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி விருச்சிககாந்த் என்று மாற்றிக்கொண்டதாகவும் சொல்லுவார். ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காமெடி சீன் அது.

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி

காதல் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், பெற்றோரும் காலம் சென்றதால், மனநிலை பாதித்து சாலைகளில் சுற்றி திரிவதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது.

பாபுவின் நிலை கண்டு சினிமா துறையினர் சிலர் அவருக்கு உதவிகள் செய்தனர்.

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் ஒரு ஆட்டோவில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. எப்படி மரணம் அடைந்தார் என்பது குறித்த விபரங்கள் எதுவும் இல்லை.

உடலை மீட்ட போலிசார், கீழ்பாக்கம் மருத்துவகல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்புதான் தீப்பெட்டி கணேசன் மரணம் அடைந்தார். இப்போது பாபு. வறுமையில் வாந்த குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குணச்சித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்கள்; திரையுலகினர் அதிர்ச்சி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது....

கருத்து வேறுபாட்டால் விபரீதம்… காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம்...

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள்...

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து...
- Advertisment -
TopTamilNews