அண்ணனின் ஆட்சி.. எடப்பாடியில் ஓபிஎஸ்

 

அண்ணனின் ஆட்சி.. எடப்பாடியில் ஓபிஎஸ்

முதல்வர் பழனிச்சாமிக்கு வாக்குகள் சேகரிக்க எடப்பாடி தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.

அண்ணனின் ஆட்சி.. எடப்பாடியில் ஓபிஎஸ்

‘’ அம்மா வழியில் தமிழகத்தை தடம்பிறழாது வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி. நல்லாட்சி நடத்தி வரும் அண்ணனின் ஆட்சி தொடர வேண்டும்’’என்றதும் கூட்டத்தினர் ஆரவாரித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் நான்கு ஆண்டுகால சாதனைகளையும் பட்டியிலிட்டு பேசினார் ஓபிஎஸ்.

அண்ணனின் ஆட்சி.. எடப்பாடியில் ஓபிஎஸ்

ஈபிஎஸ் -ஓபிஎஸ் மோதல் என்று சமீக காலமாக அதிக செய்திகள் வந்த நிலையில் ஓபிஎஸ் இப்படி பேசியது கண்டு தொண்டர்கள் விசில் அடித்து குதூகலித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ், ஸ்டாலினை கடுமையாக சாடினார்.

அண்ணனின் ஆட்சி.. எடப்பாடியில் ஓபிஎஸ்

‘’எப்படியாவது ஸ்டாலின் முதல்வர் ஆகிடவேண்டும் என்று பொய் பொய்யாக பேசி வருகிறார். அவர் பேசுறது எல்லாம் பொய். அண்டப்புழுகு; ஆகாசப்புழுகுதான் ஸ்டாலின் பேசுறதெல்லாம். 2006 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்களே, நிலம் கொடுத்தார்களா? இல்லை.
சட்டமன்றத்தில் நாங்க கேட்டோம். 2 ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னீங்களே 2 வருசமாச்சே என்று கேட்டதுக்கு , கருணாநிதிக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடுச்சு.

இப்படித்தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் செல்லாதவை; கள்ளநோட்டுகள்! நம்ம அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு உறுதியாக செல்லும்’’என்றார் ஓபிஎஸ்.