ஓட்டல் அறையில் ஓபிஎஸ்சுடன் முதல்வர் அவசர ஆலோசனை

 

ஓட்டல் அறையில் ஓபிஎஸ்சுடன் முதல்வர் அவசர ஆலோசனை

தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து உளவுத்துறை தந்த ரிப்போர்ட்டை பார்த்து ஷாக் ஆகிவிட்டாராம் முதல்வர். அதனால்தான் அவர் நேற்று பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வந்த முதல்வர், திடீரென்று அப்செட்டாகி இருந்தது அதிமுக நிர்வாகிகளை அதிரவைத்தது.

இது ஒருபுறமிருக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஓட்டல் அறையில் ஓபிஎஸ்சுடன் முதல்வர் அவசர ஆலோசனை

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், ‘’எனக்கு அவர்(சசிகலா) மீது எந்த வருத்தமும் இல்லை. இப்போது இல்லை எப்பவுமே இருந்தது இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னல் சில சந்தேகங்கள் அவர் மீது இருந்தது. அம்மா சமாதியில் நான் அளித்த பேட்டியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சில சூழல்களில் அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் விடுபடும் என்பதை தான் நான் சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. நான் அவருடனும், அம்மாவுடனும் பயணித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் அம்மாவுடன் அவர் இருந்திருக்கிறார்கள். அவர் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை’’என்று அழுத்தமாக அவர் தெரிவித்திருந்தது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓட்டல் அறையில் ஓபிஎஸ்சுடன் முதல்வர் அவசர ஆலோசனை

இந்த சூழலில் இன்று துணைமுதல்வரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் சென்ற ஓபிஎஸ் சென்னீஸ் கேட்வே ஓட்டலில் தங்கியிருக்கிறார். இன்று மாலையில் அவர் எடப்பாடி மற்றும் சேலம் மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

சேலத்தில் இருந்து கரூரில் பிரச்சாரம் செய்ய புறப்பட இருந்த முதல்வர், சென்னீஸ் கேட்வே ஓட்டல் சென்றூ ஓபிஎஸ்சுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.