வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்

 

வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்

இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐநாவில் மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்

47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்கு செலுத்தின. இதன் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.

இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல். இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும் என்கிறார் ப.சிதம்பரம்.

அவர் மேலும், வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.