நாளையுடன் பிரச்சாரம் நிறைவு: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

 

நாளையுடன் பிரச்சாரம் நிறைவு: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் தலைவர்கள்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாளையுடன் பிரச்சாரம் நிறைவு: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 3 கட்ட வாக்குப்பதிவும், மேற்குவங்கத்தில் 8 கட்ட வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.126 தொகுதிகள் கொண்ட அசாமில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27 தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 1ல் 39 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 6ல் 40 தொகுதிகளூக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மார்ச்27ல் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்கம் மற்றும் அசாமில் வரும்27ம் தேதி அன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. அதனால் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தை தக்க வைக்க வேண்டும் என்று மம்தாவும், மேற்கு வங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று பாஜகவும் மும்முரமாக களத்தில் உள்ளனர்.