போயஸ் கார்டனில் சசிகலா! ஜெ., வீட்டின் பின்பக்கம் சென்று..

 

போயஸ் கார்டனில் சசிகலா! ஜெ., வீட்டின் பின்பக்கம் சென்று..

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வந்த சசிகலா அரசியலில் புயலாய் கிளம்புவார் என்று எல்லொரும் எதிர்பார்த்திருக்க, தி.நகர் அபிபுல்லா சாலை வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மேலும், மார்ச் 3ம் தேதி அரசியலை விட்டே விலகுகிறேன் என்று அறிவித்து ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

போயஸ் கார்டனில் சசிகலா! ஜெ., வீட்டின் பின்பக்கம் சென்று..

ஊடகங்களில் தொடர்ந்து இடம்பிடித்து வந்த சசிகலா பற்றிய பேச்சு அதிலிருந்து குறைந்தது.

திருவிடைமருதூர் சிவன் கோயில் குருக்கள் சொன்ன ஆலோசனையின்படி, கடந்த 17ம் தேதி திடீரென்று தஞ்சாவூர் சென்ற சசிகலா குலதெய்வத்தை வணங்கினார். கணவர் நடராஜனின் சகோதரர்கள் குழந்தைகளின் காதுகுத்து விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் கணவர் நடராஜன் சமாதிக்கு சென்று வணங்கினார்.

19ம் தேதி அன்று சென்னை திரும்பிய சசிகலா இன்றைக்கு போயஸ்கார்டனுக்கு சென்றார். காலை 6 மணிக்கே தி.நகரில் இருந்து புறப்பட்ட சசிகலா, போயஸ் கார்டன் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார்.

போயஸ் கார்டனில் சசிகலா! ஜெ., வீட்டின் பின்பக்கம் சென்று..

ஜெயலலிதாவுடன் வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுவிட்டதாலும், இன்னமும் அது மக்கள் பார்வைக்கு அனுமதி இல்லாமல் இருப்பதாலும் சசிகலா அங்கு போகவில்லை.

வேதா நிலையம் இல்லத்தை பார்த்தபடியே பின்பக்கம் சென்று சிவன் கோயிலில் தரிசனம் செய்த சசிகலா, அருகிலேயே தனக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களாவை பார்வையிட்டார். உள்ளே சென்று பார்க்காமல் வெளியே நின்று பார்த்தபடியே காரில் ஏறி தி.நகர் இல்லத்திற்கு சென்றார்.