ஓபிஎஸ்சை டயர்நக்கின்னு சொன்ன அன்புமணியும் கடைசியில அந்த டயரை.. உதயநிதியின் பேச்சில் ஆரவாரித்த கூட்டம்

ஓபிஎஸ்சை டயர்நக்கின்னு சொன்ன அன்புமணியும் கடைசியில அந்த டயரை.. உதயநிதியின் பேச்சில் ஆரவாரித்த கூட்டம்

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட்டப்பெயரைச்சொல்கிறேன் அமைச்சர் யாருன்னு கண்டுபிடிக்கிறீங்களா? என்று கேட்டுவிட்டு,
பொருட்களின் பெயரை உதயநிதி சொல்லச்சொல்ல, அது எந்த அமைச்சரோட பட்டப்பெயர் என்று பொதுமக்கள் சொல்ல, உதயநிதியின் பிரச்சார பொதுக்கூட்டம் ருசிகரமானது.

ஓபிஎஸ்சை டயர்நக்கின்னு சொன்ன அன்புமணியும் கடைசியில அந்த டயரை.. உதயநிதியின் பேச்சில் ஆரவாரித்த கூட்டம்

’பபூன்’ என்று உதயநிதி சொல்ல, ராஜேந்திரபாலாஜி என்று உரக்க குரல் எழுப்பினர். ’பலூன்’ என்று சொல்ல, பலூன் பாலாஜிஎன்று உற்சாகமாக குரல் கொடுத்தனர்.

’தெர்மாக்கோல்’ என்றதும் செல்லூர் ராஜூ என்றனர். ’குட்கா’ என்றதும் விஜயபாஸ்கர் என்றனர். ’பாமாயில்’ என்றதும் பாமாயில் பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் என்றனர்.

’மெயின்ரோடு’ என்றதும் மெயின்ரோடு ஜெயக்குமார் என்றனர். ’எடுபுடி’ என்றதும் எடப்பாடி என்றனர்.

ஓபிஎஸ்சை டயர்நக்கின்னு சொன்ன அன்புமணியும் கடைசியில அந்த டயரை.. உதயநிதியின் பேச்சில் ஆரவாரித்த கூட்டம்

அடுத்து ரொம்ப ஈசி என்று சொல்லிவிட்டு, ’டயர்நக்கி’ என்றதும் ஓபிஎஸ் என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் முகம் சுழித்ததை பார்த்த உதயநிதி, தப்பா நெனக்கிக்காதிங்கம்மா, டயர் நக்கின்னு நான் சொல்லல, நம்ம சின்னய்யா இருக்காருல்ல.. டாக்டர்..டாக்டரய்யா இருக்காருல்ல.. அன்புமணி ராமதாஸ் இருக்காருல்ல.. அவரு.. நாம எல்லாம் கோபம் வந்தா திட்டுவோம். போடான்னு சொல்லுவோம். போடீன்னு சொல்லுவோம். கெட்ட வார்த்தையில கூட திட்டுவோம். ஆனா, யாராவது இப்படி திட்டி பார்த்திருக்கீங்களா… போய்யா டயர்நக்கி… நான் சொல்லம்மா.. திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து சொன்னார். கடைசியில அவரு சேர்ந்து அந்த டயரை.. என்பதோடு முடித்துக்கொண்டார்.

அதற்கு மேலும் என்ன சொல்ல வருகிறார் உதயநிதி என்று கூட்டத்தினர் ஆரவாரித்தனர்.