’’திமுகவின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த மர்ம கம்பெனி எது?’’

 

’’திமுகவின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த மர்ம கம்பெனி எது?’’

யார் யாருக்கு முதலாளி? திமுக , காங்கிரஸ் மற்றும் வி.சி.க போன்ற சிறிய கட்சிகள் சர்வதேச சுவிசேஷகர்கள் மூலம் கையாளப்படுகிறதா? இல்லையெனில் திமுக இந்த சுவிசேஷகர்களை வாக்குகளுக்கு பயன்படுத்துகிறதா? யார் யாரை பயன்படுத்துகிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியது என்கிறார் தமிழக பாஜக தலைவர் காயத்ரி ரகுராம்.

’’திமுகவின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த மர்ம கம்பெனி எது?’’

மேலும், ஒவ்வொரு தேர்தலுக்கும் தேர்தல் நிதி வசூலிக்கும் திமுக கடந்த 10ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் தேர்தல் நிதி வசூலிக்காமல் தேர்தலை எதிர்கொள்ளும் மர்மம் என்ன? தமிழகத்தை யாரிடம் அடகு வைப்பதாக உறுதி அளித்துள்ளீர்கள் என்று கேட்கிறார்.

உங்களுக்கு தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த மர்ம கம்பெனி எது? தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தவுடன் அவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியை எழுதி தர ஒப்புக்கொண்டுள்ளீர்கள்? இப்படி பல கேள்விகள் மக்கள் நெஞ்சை உறுத்துகிறது! விளக்குவாரா ஸ்டாலின் என்று கேட்கிறார் அவர்.

திமுகவின் தேர்தல் பணிகளை கவனிக்க ஐபேக் குழுவினருக்கு கோடிகள் கொட்டிக் கொடுத்திருக்கின்றன திமுக என்ற பேச்சு இருக்கும் நிலையில், திமுகவின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் நிறுவனம் எது என்ற கேள்வி எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.