நான் ரெடி நீங்கள் ரெடியா? ஸ்டாலின், வைகோவுக்கு காயத்ரி ரகுராம் சவால்

 

நான் ரெடி நீங்கள் ரெடியா? ஸ்டாலின், வைகோவுக்கு காயத்ரி ரகுராம் சவால்

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளன. அதிமுக கூட்டணி மீது திமுக கூட்டணியும் திமுக கூட்டணி மீது அதிமுக அணியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நான் ரெடி நீங்கள் ரெடியா? ஸ்டாலின், வைகோவுக்கு காயத்ரி ரகுராம் சவால்

அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிடும்போது, 10 ஆண்டுகால சோதனைகள் என்று திமுகவினர் பட்டியலிட்டு வருகின்றனர். பதிலடியாக திமுகவின் கடந்த கால ஆட்சியை கடுமையாக சாடி வருகின்றனர் அதிமுக கூட்டணியினர். அதில் குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்சனையில், ஈழ இறுதி யுத்தம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நான் ரெடி நீங்கள் ரெடியா? ஸ்டாலின், வைகோவுக்கு காயத்ரி ரகுராம் சவால்

இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக பாஜகவினர் திமுகவை கடுமையாக சாடி வருகின்றனர்.

தர்மம் அதர்மத்தை வெல்லுமா !இந்த தேர்தல் இந்துகளுக்கும் இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சக்திகளுக்குமான தேர்தல் தீய சக்திகளான ஸ்டாலின் வைகோ கூட்டணியை தோற்கடிப்பது காலத்தின் கட்டாயம். இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்த தீய சக்திகளுக்கு எதிராய் இந்துக்கள் ஒன்றினைவோம், தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ள தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் ?ஒன்னரை இலட்சம் ஈழ தமிழர்களை கொன்று குவித்தது யார் ? ஸ்டாலின், வைகோ சிதம்பரம் , உதய நிதி ஆகியோரில் யார் விவாதத்திற்கு தயார்? நான் ரெடி நீங்கள் ரெடியா? என்றும் சவால் விட்டிருக்கிறார்.