3 ஆண்டுகளில் 232 பேர் காவலில் மரணம் ; அதிரவைக்கும் தகவல்!

 

3 ஆண்டுகளில் 232 பேர் காவலில் மரணம் ; அதிரவைக்கும் தகவல்!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 232 காவலில் மரணமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காவல் மரணங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடியை சேர்ந்த தந்தை மகன் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பூதாகரமானதைத் தொடர்ந்து பல காவல் மரண விவகாரங்கள் அரசின் கவனத்திற்கு வந்தது. காவல் மரணங்களை தடுக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

3 ஆண்டுகளில் 232 பேர் காவலில் மரணம் ; அதிரவைக்கும் தகவல்!

இந்த நிலையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு தமிழகத்தில் 232 பேர் காவலில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் 136 பேரும் நீதிமன்ற காவலில் 1,797 பேரும் உயிரிழந்ததாகவும் 2019 – 20ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் 112 பேரும் நீதிமன்ற 1,584 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் நீதிமன்றம் மற்றும் போலீஸ் காவலில் 232 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. கடந்த 2018 -19ம் ஆண்டில் தான் தமிழகத்தில் அதிகமாக காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.