பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

 

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலின்போது ஒவ்வொரு கட்சியும் கேட்கும் முக்கிய கேள்வியே, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்பதுதான். யார் அதிக பணம் செலவழிப்பதாக சொல்கிறார்களோ அவர்களுக்குத்தா சீட் ஒதுக்குகிறது கட்சி தலைமை.

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

இப்போது மட்டுமல்ல எல்லா காலத்திலும் இருந்தது. ஆனால், எல்லா வேட்பாளர்களிடத்திலும் இப்படி பார்க்காமல் ஏழ்மையானவர்களையும் பதவியில் அமரவைத்து அழகு பார்த்ததும் நடந்திருக்கிறது. நல்லவர்களாக பார்த்து அவர் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவர் என்று தெரிந்தும் அவருக்கு சீட் கொடுத்து, அவருக்கான விருப்பமனு, வேட்புமனு செலவு உள்பட அனைத்தையும் கவனித்து அவருக்காக தீவிர பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைத்த நேர்மை அண்ணாவிடமும், எம்.ஜி.ஆரிடமும் இருந்தது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதியிடம் நேர்காணலின்போது, ‘’எவ்வளவு பணம் செலவு செய்வீங்க?’’ என்று ஆ.ராசா சிரித்துக்கொண்டே கேட்க, ‘’அப்பா எவ்வளவு கொடுக்கிறாரோ அதை அப்படியே செலவு செய்வேன்’’ என்று உதயநிதியும் சிரித்துக்கொண்டே சொன்னார்.

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

கட்சித்தலைவர் அப்பா என்பதால் அவர்தான் மகனுக்கு கொடுத்தே ஆகவேண்டும். அதனால் அவர் அப்படி சொன்னதில் ஒன்று தவறில்லை. ஆனால், திமுக வேட்பாளர்கள் எல்லோரும் ஸ்டாலின் கையையே எதிர்பார்த்திருப்பதுதான் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கூட்டணி கட்சியினரும் திமுகவையே எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.

5 கோடி செலவு செய்வேன்… 10 கோடி செலவு செய்வேன்.. என்று கெத்தாக பேசி சீட் வாங்கிவிட்டு, தலைமை கொடுத்தால்தான் உண்டு என்று சொல்லிக்கொண்டிருப்பதால் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்.

எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில், உல்டா விட்டவர்கள் ஒருபக்கம் இருக்க, உண்மையிலேயே சொல்லிவிட்டு இப்போது பணத்தை புரட்ட முடியாமல் திணறிக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். நாலாபக்கமும் வளைத்து வளைத்து ரெய்டு நடந்துகொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் பலரும் பணத்தை வெளியே எடுக்க மிரளுகிறார்கள். ஸ்பான்சர் செய்வதாக சொன்ன பலரும் இப்போது ஸ்பான்சர் செய்யவதில் இருந்து பின்வாங்கிவிட்டதால் பல வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகம் கூட திறக்க வழியில்லாமல் இருக்கிறார்களாம்.

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

எல்லோரும் தலைமையை எதிர்பார்த்திருக்க, தலைமையே தலையில் கை வைத்துக்கொண்டு இருக்குதாம். வரவேண்டிய பணம் வரும் வழிகளில் எல்லாம் சிக்கல் சிக்கலாகவே இருக்குதாம். எந்தெந்த வழிகளில் எல்லாம் திமுகவுக்கு பணம் வருகிறது என்று பார்த்தா அந்த வழிகளில் எல்லாம் ஆப்பு வைத்துவிட்டதாம் பாஜக. ரெய்டு பயத்தால் பணத்தை வெளியே எடுக்க/ கொடுக்க பயந்து நடுங்குகிறார்கள் தொழிலதிபர்கள். இதனால் கொடுத்து வைத்திருந்த பணத்தையே கூட திரும்ப வாங்க முடியாமல் தவிக்கிறதாம் திமுக.

அந்த பிரபலமான நகைக்கடை திமுக தலைமைக்கு பல கோடிகளை தருவதாக சொல்லி இருக்கிறது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வருமான வரித்துறை, அந்த நகைக்கடை சம்பந்தப்பட்ட அத்தனை அலுவலங்களையும் அலசி எடுத்துவிட்டது. இதனால், தொழிலதிபர்களூம், பிரபலங்களும் கையை கட்டிக்கொண்டு நிற்பதால், திமுக கையை பிசைந்து நிற்கிறது.

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

சங்கமே இப்ப கடன்ல தத்தளிக்குது… எனும் வடிவேலு காமெடி மாதிரி, திமுகவின் நிலைமை இப்படி இருக்க, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், தன்னிடம் 25 லட்சம்தான் இருக்குது. திமுககிட்ட கேட்டு வாங்கி கொடுங்க என்று சத்தியமூர்த்தி பவன் கூட்டத்திலேயே ஓபனாக கேட்க, சீட் வாங்குறதுக்கே கண்ணீர் விட வேண்டியதா போச்சு. இதுல நீ வேற.. என்று எரிச்சல்பட்டிருக்கிறார்கள்.

பாஜக வைத்த செக்! கைவிரித்த தொழிலதிபர்கள் – கையை பிசையும் அறிவாலயம்

பாஜக வைத்த இந்த வேட்டுக்கு திமுக எப்படி விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது என்பதை, ரெய்டு மூலம் அச்சுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை எனும் கனிமொழியின் புலம்பலே சொல்லிவிட்டது.

பாஜக என்னதான் வேட்டு வைத்தாலும் எப்படியும் எங்களுக்கு வர வேண்டியது வந்து சேரும். அது போய்ச்சேர வேண்டிய இடத்துக்கும் போய்ச்சேரும் என்று சில திமுக சீனியர்கள் காலரை தூக்குகிறார்கள்.